Asianet News TamilAsianet News Tamil

ராய்ப்பூரில் நடு ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி, சிராஜ்!

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் ராய்ப்பூரில் நடு ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
 

Team India Celebrates series win against New Zealand in Raipur
Author
First Published Jan 22, 2023, 9:03 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல்கட்டமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைக் கண்டது. இதன் மூலம் 2 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

IND vs NZ 2nd ODI: ராய்ப்பூரில் மண்ணைக் கவ்விய நியூசிலாந்து: இந்தியா வெற்றி: 2-0 என்று தொடரையும் கைப்பற்றியது!

இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ரோகித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்பதை மறந்து தவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பௌலிங் தேர்வு செய்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ராய்ப்பூர் மைதானத்தில் மோதும் முதல் போட்டி என்பதால், இந்த மைதானம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரிந்திருக்காத ஒரு இக்கட்டான நிலையில், டாஸ் இந்தியாவிற்கு சாதகமானது.

எங்கிருந்தோ ஓடி வந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன்: அலேக்காக தூக்கிச் சென்ற பாதுகாவலர்!

இதையடுத்து, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி தட்டி தடுமாறி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. கடந்த போட்டியில் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்த பிரேஸ்வெல் இந்தப் போட்டியில் 22 ரன்களில் வெளியேறினார். அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், தாக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மகளின் திருமணம்- வீட்டை அலங்கரித்த சுனில் ஷெட்டி: கண்டாலாவில் நடக்கும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!

பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவர் 50 பந்துகளில் 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 11 ரன்களில் வெளியேற, சுப்மன் கில் வெற்றிக்கு தேவைப்பட்ட 2 ரன்களை பவுண்டரி அடித்து எடுத்துக் கொடுக்க இந்தியா 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இஷான் கிஷான் 8 ரன்னும், சுப்மன் கில் 40 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். 2ஆவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியாவிடம் சரண்டரான நியூசிலாந்து: 108க்கு ஆல் அவுட்!

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இந்திய வீரர்கள் ராய்ப்பூரில் நடு ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் தான் கேக்கை வெட்டியுள்ளனர். இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 24 ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியமா ஒன்னும் தெரியல: மறந்தே போச்சு: டாஸில் ஜெயிச்ச ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே பதில்

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios