சத்தியமா ஒன்னும் தெரியல: மறந்தே போச்சு: டாஸில் ஜெயிச்ச ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே பதில்
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸில் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் ஆடி 349 ரன்கள் எடுத்தது. இதில், சுப்மன் கில் 208 ரன்கள் எடுத்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல் சீசன் முழுவதும் ரிஷப் பண்ட் அணிக்கு தேவை - ரிக்கி பாண்டிங்!
பின்னர், 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி ஆடியது. ஆனால், நியூசிலாந்து அணியில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 7ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பிரேஸ்வெல் - சான் ட்னர் ஜோடி இந்திய அணியின் பவுலர்களை கிறங்க வைத்தனர். காட்டுத்தனமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இறுதியாக 6 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷர்துல் தாக்கூர் 50ஆவது ஓவரை வீசினார். முதல் பந்தில் சிக்சர் விளாச, 2 ஆவது பந்தை வைடாக வீசினார். பின்னர் வீசப்பட்ட 2ஆவது பந்தில் பிரேஸ்வெல் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அவர் 78 பந்துகளில் 10 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 49.2 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
வரிசையாக நடையை கட்டும் வீரர்கள்: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து 15/5!
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கா? பீல்டிங்கா? என்ன கேட்க வேண்டும் என்பது குறித்து மறந்து விட்டார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பீல்டிங் தேர்வு செய்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டேன். டாஸ் முடிவை பற்றி அணியுடன் நிறைய விவாதித்தேன் என்று கூறியுள்ளார்.
அப்போது நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத், ஒளிபரப்பாளர் ரவிசாஸ்திரி, நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இதற்கு முன்னதாக கடந்த 1981 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜாவெட் மியன்டாட் டாஸ் வென்ற பிறகு எனக்கு தெரியாது, நான் உள்ளே செல்கிறேன் அதன் பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.