ரோகித்துக்கு இவ்வளவு நக்கல் கூடாது: டாஸ் ஜெயிச்சு, ரொம்பவே யோசிச்ச ரோகித் சர்மா: இந்தியா பௌலிங் தேர்வு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று, கொஞ்ச நேரம் யோசித்து, பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கடந்த 18 ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் ஆடி 349 ரன்கள் குவித்தது. 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி ஆடியது. ஆனால், அந்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
டிரெஸ்ஸிங் ரூமில் வீடியோ எடுத்த சகால்: உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு - ரோகித் சர்மா கிண்டல்!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்யவா, பீல்டிங் தேர்வு செய்யவா என்று கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச்சு தேர்வு செய்தார். இன்று களமிறங்கும் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிரிஜ் பூஷன் சரண் சிங் 4 வாரங்களுக்கு பதவி விலகல்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்!
இதையடுத்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், நாங்களும் பௌலிங் தான் தேர்வு செய்தோம். இது தான் முதல் சர்வதேச போட்டி என்பதால், விக்கெட் எப்படி விழும் என்பது குறித்து தெரியாது. கடந்த போட்டி சிறப்பாக இருந்தது. கடந்த போட்டியைப் போன்று இந்தப் போட்டியிலும் பேட்டிங் இருக்கும் என்று நம்புகிறேன். நாங்களும் அதே அணியுடன் தான் களமிறங்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆட்டைய போட்ட மோசடி கும்பல்: ஐசிசியிடமிருந்து ஆன்லைன் மூலமாக ரூ.20 கோடி அபேஸ்!
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
நியூசிலாந்து: பின் ஆலென், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டெரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி சிப்லே, லக்கி பெர்குசன், பிளைர் டக்னர்.