டிரெஸ்ஸிங் ரூமில் வீடியோ எடுத்த சகால்: உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு - ரோகித் சர்மா கிண்டல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், டிரெஸ்ஸிங் ரூமில் வீடியோ எடுத்த சகாலைப் பார்த்து உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ரோகித் சர்மா கிண்டல் அடித்துள்ளார்.
 

Yuzvendra Chahal took a video in dressing room, Indian skipper Rohit Sharma critized him

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. கடந்த 18 ஆம் தேதி நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் 208 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் 4 வாரங்களுக்கு பதவி விலகல்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்!

இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷ்கீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சகால், மைதானத்தில் என்ன நடக்கிறது என்பதையும், டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது என்பதையும் தனது சகால் டிவி மூலமாக வெளிக்காட்டியுள்ளார். மேலும், இஷான் கிஷான் மற்றும் சகால் இருவரும் உரையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது, உங்களது இரட்டை சதத்திற்குப் பின்னால், எனது பங்களிப்பைப் பற்றி பார்வையாளர்களுக்கு சொல்வீர்களா என்று சகால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்டைய போட்ட மோசடி கும்பல்: ஐசிசியிடமிருந்து ஆன்லைன் மூலமாக ரூ.20 கோடி அபேஸ்!

அதுமட்டுமின்றி, டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் மசாஜ் பெட்டையும் காண்பித்துள்ளார். அவர் வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும் போது வந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கிண்டல் அடித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் சகால் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.

நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? காவ்யா மாறனிடம் கேட்ட தென் ஆப்பிரிக்கா ரசிகர்!

இந்த மைதானத்தில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி என்பதால், மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்குமா? அல்லது பௌலிங்கிற்கு சாதகமாக இருக்குமா? என்பது குறித்து எந்த தகவலும் கிடையாது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயிக்கும் அணியே அதிக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், அதிக ரன்கள் குவிக்கும் அணி வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ 2nd ODI: இதான் ஃபர்ஸ்ட் மேட்ச்: பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமா? பௌலிங்கிற்கு சாதகமா?

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios