எங்கிருந்தோ ஓடி வந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன்: அலேக்காக தூக்கிச் சென்ற பாதுகாவலர்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியின் போது ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வேகமாக ஓடி வந்த சிறுவன் ஒருவன் ரோகித் சர்மாவை கட்டிபிடிக்க, பாதுகாவலர் அந்த சிறுவனை பத்திரமாக அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
 

A young fan boy hugged Rohit Sharma during batting in 2nd ODI against New Zealand in Raipur

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்ற மறந்த பிறகு சிறிது நேரம் கழித்து பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ஆடிய நியூசிலாந்து அணியில் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மகளின் திருமணம்- வீட்டை அலங்கரித்த சுனில் ஷெட்டி: கண்டாலாவில் நடக்கும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!

இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். ரோகித் சர்மா நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டியின் 9.3 ஆவது ஓவரில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் சிக்சர் விளாசினார். இதற்கிடையில், மைதானத்திலிருந்து வேகமாக ஓடி வந்த சிறுவன் ஒருவன் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்துள்ளார். 

முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியாவிடம் சரண்டரான நியூசிலாந்து: 108க்கு ஆல் அவுட்!

சிறுவன் வேகமாக ஓடி வருவதைக் கண்ட பாதுகாவலர் பின்னாடியே வந்து அந்த சிறுவனை பத்திரமாக மீட்டுச் சென்றுள்ளார். அப்போது அவரிடம், அந்த சிறுவனை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட  51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 

ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 24 ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

சத்தியமா ஒன்னும் தெரியல: மறந்தே போச்சு: டாஸில் ஜெயிச்ச ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே பதில்

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios