ரோகித் சர்மா மறந்து நின்ற நேரத்தை விட நியூசிலாந்து ஆடிய நேரம் கம்மிதான்: சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்!
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நியூசிலாந்து பேட்டிங் செய்த நேரம் கம்மிதான் என்று இந்திய கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா வந்த நியூசிலாந்து அணி முதல் கட்டமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்பூர் மைதானத்தில் நேற்று நடந்தது.
ஜோஸ் பட்லர் அதிரடி வீண் - மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
ராய்ப்பூர் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதும் முதல் போட்டி என்பதால், மைதானம் எப்படி இருக்கும் என்பது குறித்து எந்த அணிக்கும் தெரியாத ஒரு நிலை. அப்படியிருக்கும் சூழலில் டாஸ் தான் முக்கியம். எந்த ஒரு அணி டாஸ் ஜெயிக்கிறதோ அந்த அணி தான் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நம்ப வச்சு ஏமாத்திய நண்பன்: நிலம் வாங்கித் தருவதாக கூறிய நண்பனிடம் ரூ.44 லட்சம் ஏமாந்த உமேஷ் யாதவ்!
அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்றே மறந்துவிட்டார். அவர் யோசித்தபடி பௌல் பௌல் என்று சொல்லியபடியே சிறிது நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு பௌலிங் தேர்வு செய்தார். இது குறித்து கேட்ட போது, நான் மறந்துவிட்டேன் என்று கூறினார். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாறி வந்த நியூசிலாந்து அணியில் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ராய்ப்பூரில் நடு ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி, சிராஜ்!
இறுதியாக நியூசிலாந்து 34.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 300 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 50 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியாக இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நியூசிலாந்து அணியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டாஸ் போடும் போது ரோகித் சர்மா நின்ற நேரத்தை விட நியூசிலாந்து அணி ஆடிய நேரம் ரொம்பவே குறைவுதான் என்று நான் நினைக்கிறேன் என்று விமர்சித்துள்ளார்.
எங்கிருந்தோ ஓடி வந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன்: அலேக்காக தூக்கிச் சென்ற பாதுகாவலர்!