Asianet News TamilAsianet News Tamil

ஒலிம்பிக்கில் ஆண்கள், பெண்கள் டி20 கிரிக்கெட்: 6 அணிகள் கொண்ட கிரிக்கெட்டிற்கு ஐசிசி பரிந்துரை!

வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. அதற்கான முடிவை வரும் அக்டோபர் மாதம் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
 

ICC recommends 6-team T20 Men and Women cricket at 2028 Olympics in Los Angeles
Author
First Published Jan 22, 2023, 1:55 PM IST

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கான முதல் கட்டமாக வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி20 போட்டி கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அந்த தொடரில் புதிதாக சேர்க்கப்பட இருக்கும் புதிய விளையாட்டுக்கள் குறித்த பரிந்துரை பட்டியலை வரும் மார்ச் மாதத்திற்கு உள்ளாக இறுதி செய்ய வேண்டும். அப்படி பரிந்துரை செய்யப்படும் புதிய விளையாட்டுக்களை சர்வதேச ஒலிம்புக் குழு தான் இறுதி செய்யும். அந்த குழு வரும் அக்டோபர் மாதம் அந்த விளையாட்டுகளை உறுதி செய்யும்.

ரோகித் சர்மா மறந்து நின்ற நேரத்தை விட நியூசிலாந்து ஆடிய நேரம் கம்மிதான்: சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்!

வரும் அக்டோபர் மாதம் மும்பையில் சர்வதேச ஒலிம்புக் குழு ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஐசிசியின் தலைவர் கிரெக் பார்க்லே தலைமையிலான ஐசிசி ஒலிம்பிக் பணி குழுவில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சேர்க்கப்பட்டார். 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து வரும் 2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தான் ஒலிம்பிக் பணி குழுவில் ஜெய் ஷா சேர்க்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

ஜோஸ் பட்லர் அதிரடி வீண் - மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

அந்த ஒலிம்பிக் குழுவில் இடம் பெற்றுள்ள ஜெய் ஷா, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும், 6 அணிகள் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி20 போட்டி கிரிக்கெட் போட்டியாக பரிந்துரை செய்துள்ளது. அப்படி சேர்க்கப்படும் புதிய விளையாட்டுகள் கொண்ட பட்டியல் கராத்தே, கிக் பாக்‌ஷிங், ஸ்குவாஷ், பிளாக் ஃபுட்பால், லாக்ரோஸ், பிரேக் டான்ஸ், பேஸ்பால் அல்லது சாப்ட்பால், மோட்டார் ஸ்போர்ட் மற்றும் கிரிக்கெட் ஆகியவை ஆகும். இந்தப் பட்டியல் வரும் மார்ச் மாதம் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு இறுதிப் பட்டியல் வரும் அக்டோபர் மாதம் சர்வதேச ஒலிம்பிக் குழு மூலமாக உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ப வச்சு ஏமாத்திய நண்பன்: நிலம் வாங்கித் தருவதாக கூறிய நண்பனிடம் ரூ.44 லட்சம் ஏமாந்த உமேஷ் யாதவ்!

வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கண்டிப்பாக கிரிக்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios