மஞ்சள் மகிமை.. ஆண்மை குறைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அருமருந்து..!
மஞ்சளில் உள்ள இயற்க்கை வேதிப்பொருட்கள், கிருமி நாசினியாக மட்டும் செயல்படாமல்... நமக்கு எண்ணற்ற பலன்களை தர கூடியது. ஆண்மை குறைவுக்கும் இது அருமருந்தாக செயல்படுவதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது, ஒரு இயந்திர உலகம். அவசர அவசரமாக எழுந்து , அவசர அவசரமாக ஆபிசுக்கு கிளம்பி, கீழே அமர்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல், கையில் கிடைத்ததை வாயில் புட்டு போட்டு கொண்டு, அலுவலகத்திற்கு சென்று சேர்ந்தாலும். அங்கும் டென்சன் இல்லாமல் இருப்பது இல்லை.
குறிப்பாக இது போன்ற டென்ஷானால் பல இளைஞர்கள் புகைப்பழக்கம் போன்றவற்றுக்கும் அடிமையாகின்றனர். வேலை செய்ய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆரோக்கியம், எதிர்காலம் பற்றி கூட சிந்திக்காமல் பலர் உள்ளனர் என்பதே நிதர்சனம்.
இது போன்ற அவரச வாழ்க்கை முறையாலோ, என்னவோ... சமீப காலமாக ஆண்மை குறைவு பிரச்சனைகள் மேலோங்கி நிற்பதாக கூறப்படுகிறது.
பலர் இது போன்ற பிரச்சனைகளை வெளியே சொல்ல முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது ஒருபுறம் இருக்க, மற்றொரு தரப்பினர் மருத்துவர்களை அணுகி தீர்வு காண நினைக்கிறார்கள்.
Image: Getty Images
இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக விளங்குகிறது மஞ்சள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சனையை குறைக்க வல்லது என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனைக்கு, மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக செயல்படுவதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த வேதிப்பொருளை கொண்டு, ஆயின்மெண், அல்லது ஆயில் போன்று உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வர ஆணுப்ருப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஆண்மை பிரச்சனைக்கு தீர்வாக மாறும் என கூறப்படுகிறது.
மஞ்சள் என்பது ஒரு கிருமி நாசினி என்பதும், கேன்சர் செல்களை அழிக்க வல்லது என்பதும் நமக்கு தெரிந்ததே, ஆனால் ஆண்மை பிரச்சனைக்கும் தீர்வாக மாறியுள்ளது. மஞ்சளின் மகிமையை புரிந்து, ஆயுர்வேத பலன்களை கொண்ட, மஞ்சளை ஏதேனும் ஒரு வகையில் உங்கள் உணவில் சேர்த்து கொள்ள, எல்லா விதத்திலும் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.