MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் - விக்னேஷ் சிவன் இணையும் AK 62 படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் மற்றும் ரிலீஸ்? வெளியான மாஸ் அப்டேட்

அஜித் - விக்னேஷ் சிவன் இணையும் AK 62 படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் மற்றும் ரிலீஸ்? வெளியான மாஸ் அப்டேட்

அஜித் விக்னேஷ் சிவன் இணையும், ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்கிற தகவலும் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jan 27 2023, 09:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் 'துணிவு'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், அஜித் பேங்க் கொள்ளையராக நடித்திருந்தாலும், ஆக்கப்பூர்வமான கருத்தை தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

25

இந்த படம் இரண்டு வாரங்களை கடந்தும் பல திரையரங்குகளில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பொங்கலை முன்னிட்டு வெளியான துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் 'LGM’ படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த சாக்ஷி சிங் தோனி! வைரல் போட்டோஸ்

35

இந்நிலையில் அஜித் அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62 ஆவது படத்தை நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் குறித்த சில அப்டேட் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளதாகவும், தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

45

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளார். அதே போல் காமெடி கலந்த முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜ் அல்லது த்ரிஷா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

'துணிவு' மற்றும் 'ஜெயிலர்' படத்தில் நடித்த டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

55

அனிருத் இசையமைக்க, இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது லைகா நிறுவனம். இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளன. இந்த வருட பொங்கலை தல பொங்கலாக ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தீபாவளியையும் தல தீபாவளியாக கொண்டாட தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved