MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தினமும் 30% பழங்கள் சாப்பிடனும்!! சத்குரு சொல்றதோட பின்னணி தெரியுமா? 

தினமும் 30% பழங்கள் சாப்பிடனும்!! சத்குரு சொல்றதோட பின்னணி தெரியுமா? 

உடலை ஆரோக்கியமாக பேண சத்குரு பரிந்துரைக்கும் 30% பழங்கள் டயட் குறித்து இங்கு காணலாம். 

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 03 2025, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

Why Sadhguru Recommends 30 Diet Challenge : பலரறிந்த ஆன்மீக தலைவர் சத்குரு. உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்குவார்.  அவருடைய அறிவுரைகள் வாழ்க்கைக்கும், உடலுக்கும், மனதுக்கும் ஏற்றவையாக இருக்கும். அதன் காரணமாகவே பலர் அவரைப் பின்பற்றி வருகின்றனர்.இந்த பதிவில் அவர் பரிந்துரைக்கும் 30%  உணவு முறை சவால் (30% diet challenge) குறித்து காணலாம்.

28

இந்த சவாலில் நாள்தோறும் உணவில் குறைந்தபட்சம் 30 சதவீதம் புதிய பழங்களை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறார்.  பொதுவாக பழங்களை சாப்பிடும் போது உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது.  அதனுடன் செரிமான மண்டலமும் சிறப்பாக செயல்பட உதவுகிறது. முழுவதும் உணவுகளாக எடுத்துக் கொள்ளாமல் 30 சதவீதம் பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 
 

38
ஏன் பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்?

ஏன் பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்?

முழுமையாக கார்பிஹைட்ரேட் உணவுகளை எடுத்து கொண்டால் மந்தமாக உணர்வோம். எடை அதிகரிக்கும். 30% பழங்கள் உண்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இவை ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவை அதிகரிக்காது. அதிக ஆற்றலை தரும். செயற்கை சர்க்கரை நம்முடைய உடல் எடையை அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்களுடன் தொடர்புடையது. நீங்கள் சாக்லேட் சாப்பிட அதிகமாக தூண்டப்பட்டால், அதை சாப்பிட்ட பின்பு மேலும் உண்ணத் தூண்டப்படுவீர்கள். ஆனால் அதே நேரத்தில் சாக்லேட்டிற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். பசிக்காது. இது உங்களுடைய இனிப்பு தேவையை பூர்த்தி செய்வதோடு பக்க விளைவுகளையும் குறைக்கிறது. 

48
பழங்களின் சத்துக்கள்;

பழங்களின் சத்துக்கள்;

- பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவது எளிது. உடலுக்கு போதுமான ஆற்றலையும் வழங்குகின்றன. 

- " சுத்தமான உணவு வகைகளில் பழங்களும் குறிப்பிடத் தகுந்தது. இது செரிமான அமைப்பில் குறைந்த கழிவுகளையே விடுகின்றன. எளிதில் ஜீரணமாகும் உணவில் பழங்களும் உண்டு. நீண்ட நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதை விட அதிக பழங்களை உண்ணலாம்"என்கிறார் சத்குரு. 
  
- செரிப்பதற்கு கடினமான உணவுகளை உண்பதற்கு பதிலாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதாவது துரித உணவுகள், ஜங்க் புட்ஸ் விட பழங்கள் எளிதில் - செரிக்கக் கூடியவை. இவை இலகுவாகவும், அதிக ஆற்றலை தரும் உணவாகவும் இருக்கும். பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகள் செய்கின்றன. தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனை, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க பழங்கள் உண்பது நல்லது. 

58
30% டயட் சேலஞ்ச்!

30% டயட் சேலஞ்ச்!

தினமும் 30 சதவீதம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் நீக்கப்படுகின்றன.  இதனால் உடலின் தேவையில்லாத கழிவுகள் நீக்கப்பட்டு ஆரோக்கியமாக இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பழங்களை உணவில் சேர்க்கலாம். இவை உடலில் இயற்கையான நச்சுநீக்கியாக செயல்படுகிறது. 

இதையும் படிங்க:  நீங்க டயட்டில் இருக்கீங்களா? இந்த '5' பழத்தை தொட்டு கூட பாக்காதீங்க!

68
கழிவுநீக்கம்:

கழிவுநீக்கம்:

நமது உடலில் கழிவுநீக்க உறுப்பாக செயல்படுவது கல்லீரலும் சிறுநீரகங்களும் தான். இவற்றின் அழுத்தத்தை குறைக்க பழங்கள் உதவுகின்றன. உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளை சரி செய்ய ,எடை குறைக்க பல்வேறு பிரச்சனைகளுக்கு  பழங்கள் உண்பது உதவியாக இருக்கும். 

இதையும் படிங்க:  வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடலாமா? பழங்கள் சாப்பிட சிறந்த நேரம் எது?

78
பழங்களால் ஏற்படும் பலன்கள்;

பழங்களால் ஏற்படும் பலன்கள்;

- தினமும் உணவில் 30% பழங்களை எடுத்துக் கொள்வதால் மனத்தெளிவு ஏற்படுகிறது. படைப்பாற்றல் மேம்பட்டு வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். உடலில் ஆற்றல் அதிகமாகும். பழங்களை உண்ணும் போது அவை விரைவாக செரிக்கப்படும்.  இதனால் அதிக ஆற்றல் விரைவாக கிடைக்கும். உடலும் சுறுசுறுப்பாக இயங்கும். 

- மனத்தெளியுடன் தெளிவாக இருக்க விரும்புவோர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய சோம்பலை நீக்கி நீடித்த ஆற்றலை வழங்கும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. பழங்களில் உள்ள சர்க்கரை, வெள்ளை சர்க்கரையைப் போல உடனடியாக சர்க்கரை அளவு அதிகரித்து பசியை தூண்டாது. பழங்கள் நிலையான ஆற்றலை வழங்குகின்றன. பழங்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள சர்க்கரையைப் போல இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தாது. இது செயலிழப்புகள் இல்லாமல் நிலையான ஆற்றலை உறுதி செய்கிறது.

88
பழங்களை எவ்வாறு உண்ணலாம்?

பழங்களை எவ்வாறு உண்ணலாம்?

காலை உணவாக ஒரு கிண்ணம் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்களை கலவையாக உண்ணலாம். பப்பாளி, மாதுளை, செர்ரி பழங்களை ஒருநாள் எடுத்து கொள்ளலாம். இப்படி காலை உணவாக பழங்களை உண்ணலாம். ஊட்டச்சத்துகளை அதிகமாக உறிஞ்ச உதவும் பழங்களை உண்ணலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
சத்குரு
30 நாள் உணவு சவால்
பழங்களின் ஆரோக்கிய நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved