நீங்க டயட்டில் இருக்கீங்களா? இந்த '5' பழத்தை தொட்டு கூட பாக்காதீங்க!
Fruits To Avoid For Weight Loss : பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் நீங்கள் டயட்டில் இருக்கும் போது சில பழங்களை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் அது என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
பழங்கள் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. எனவே அவற்றை தினமும் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன. அதுவும் குறிப்பாக, ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற சில ஆபத்தான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்றும் நிபுணர்கள்.
பொதுவாக எடையை குறைக்க விரும்புபவர்கள் பழங்களை அதிகம் தங்களது உணவில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் எடையை குறைக்கும் போது சில பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இல்லையெனில் அவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறுகின்றனர். எனவே, டயட்டில் இருக்கும் போது எந்த மாதிரியான பழங்களை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம்:
வாழைப்பழம் எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு என இரண்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிகளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை இருக்கிறது. அதாவது, ஒரு வாழைப்பழத்தில் 37 கிராம் கார்போஹைட்ரேட்டும், 150 கலோரிகளும் உள்ளது. எனவே, நீங்கள் டயட்டில் இருக்கும் போது
ஒரு நாளைக்கு 2-3 வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடை கூடும். எனவே அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஜப்பானியர்கள் ஏன் உடல் எடை அதிகரிப்பதில்லை? அவர்களின் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்!
மாம்பழம்:
நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த பழங்களில் இதுவும் ஒன்றாகும் மாம்பழத்தில் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த பழம் நல்லதல்ல. அதாவது 100 கிராம் 60 கிராம் கலோரிகள் வரை உள்ளது. எனவே டயட்டில் இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: கிரீன் டீ vs இஞ்சி டீ - எந்த 'டீ' எடையை குறைப்பதில் சிறந்தது? பலரும் அறியா தகவல்
மாதுளை:
உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு மாதுளை அருமருந்தாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் இது ஊட்டச்சத்துக்களின் சக்தியாக விளங்குகிறது. ஆனால் இதில் கலோரிகள் அதிகமாக உள்ளது. அதாவது 100 கிராம் 83 கலோரிகள் வரை உள்ளன. எனவே டயட்டில் இருக்கும் போது அதை அதிகமாக சாப்பிட வேண்டாம்.
அவகேடோ:
100 கிராம் அவகேடோ பழத்தில் 160 கலோரிகள் உள்ளது. மேலும் இந்த பழத்தில் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. எனவே நீங்கள் டயட்டில் இருந்தால் இந்த பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சீதாப்பழம்:
சீதாப்பழம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இதில் கலோரிகள் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது. அதாவது 100 கிராம் 94 கலோரிகள் வரை உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், டயட்டில் இருப்பவர்கள் இந்த பழத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.