- Home
- உடல்நலம்
- Weight Loss : என்ன பண்ணாலும் எடை '1' கிராம் கூட குறையலயா? இந்த '4' விஷயங்களை கவனிச்சிங்களா?
Weight Loss : என்ன பண்ணாலும் எடை '1' கிராம் கூட குறையலயா? இந்த '4' விஷயங்களை கவனிச்சிங்களா?
கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என பல முயற்சிகளுக்கு பின்னும் எடை குறையவில்லை என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு, சீரகத்தண்ணீர், மூலிகை டீ என பலவற்றை கடைபிடித்தாலும் சிலருக்கு ஒரு கிராம் கூட எடை குறையாது. சில பழக்கவழக்கங்கள், உடல்நல பிரச்சனைகள் எடையை குறைப்பதில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். இந்தப் பதிவில் என்ன முயற்சி செய்தாலும் எடை குறையாமல் இருக்க என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்பதை காணலாம்.
உங்களுக்கு புரோஜெஸ்ட்டிரோன் குறைந்தால் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்துவிடும். இதனால் பசி அதிகமாகும். உடலில் நீர் பற்றாக்குறை உண்டாவதோடு, ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும். இதெல்லாம் உங்களுடைய கொழுப்பு கரைவதைத் தடுக்கின்றன. இந்த ஹார்மோன் சீரற்றத்தன்மை தைராய்டு செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. தைராய்டு ஹார்மோன் ஆற்றல் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த அவசியமானது. அதில் பிரச்சனை வந்தாலும் சிக்கல்தான்.
இன்சுலின் அளவுகள் அதிகரிப்பதால் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் எடை குறைப்பு தாமதமாகும். இன்சுலின் அதிகமாக சுரப்பதால் குளுக்கோஸ் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது எடை இழப்பை மேலும் சிக்கலாக்கும்.
குடல் பாக்டீரியாவில் சீரற்றநிலை குடல் டிஸ்பயோசிஸ் ஏற்படுத்தும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கும். அதிக சர்க்கரை உணவுகள், குறைந்த நார்ச்சத்து உணவுகள், மன அழுத்தம், ஆண்டிபயாடிக் பயன்பாடு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை குடல் டிஸ்பயோசிஸைத் தூண்டிவிடும். இன்சுலின் எதிர்ப்பு மாதிரியான வளர்சிதை மாற்றப் பிரச்சினைகள் வரலாம். இது எடை குறைப்பைத்தடுக்கும்.
மோசமான சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் பொருளில் இருந்து வெளிவரும் பிபிஏ, சுய பராமரிப்பு பொருட்களில் இருக்கும் பித்தலேட்டுகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை ஹார்மோன்களை சீர்குலைக்கும். இது வளர்சிதை மாற்றத்தைப் பாதித்து எடை இழப்பைத் தடுக்கும்.
எடை குறைப்பு என்பது குறைவாக சாப்பிட்டு அதிகமாக நகர்வது மட்டுமே கிடையாது. ஏன் எடை குறையவில்லை என மூல காரணத்தை அறிந்து செயல்பட வேண்டும்.