MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Weight Loss : உடல் எடையை குறைக்க போறீங்களா? இந்த 6 பழங்களை தொட்டுக்கூட பாக்காதீங்க.. எடை எகிறிடும்

Weight Loss : உடல் எடையை குறைக்க போறீங்களா? இந்த 6 பழங்களை தொட்டுக்கூட பாக்காதீங்க.. எடை எகிறிடும்

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சில பழங்களை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Sep 23 2025, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Weight Loss
Image Credit : Pixabay

Weight Loss

எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பழங்கள் சிறந்த தேர்வாகும். ஏனெனில் பழங்களில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆனால் எந்த மாதிரியான பழங்களை சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் பலன்கள் கிடைக்கும். ஆம், பழங்கள் ஆரோக்கியமானது என்றாலும் சில பழங்கள் அதிக கலோரிகளை கொண்டிருப்பதால் அவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. குறிப்பாக அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட பழங்களை எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் முற்றிலும் தவிர்க்கவும். இந்த பதிவில் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் எந்த மாதிரியான பழங்களை சாப்பிடக்கூடாது அல்லது மிதமான அளவில் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
வாழைப்பழம்
Image Credit : Getty

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் கலோரிகள் அதிகமாகவே உள்ளன. இதுதவிர இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவே உள்ளன. எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழத்தை மிதமான அளவில் சாப்பிடுவது நன்மை பயக்கும். இல்லையெனில் எடை இழப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

37
திராட்சை
Image Credit : Getty

திராட்சை

திராட்சை இனிப்பு நிறைந்த சுவையான பழமாகும். இந்த பழத்தின் சுவை காரணமாக நம்மை அறியாமலே நாம் அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை கட்டுப்படுத்த இது உதவும் என்றாலும், மிதமான அளவில் சாப்பிட வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் எடை அதிகரிக்கும்.

47
மாம்பழம்
Image Credit : Getty

மாம்பழம்

மாம்பழம் மிகவும் சுவையான பழங்களில் ஒன்றாகும். இதில் ஏராளமான வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. எனவே, எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இயற்கை சர்க்கரை நிறைந்த இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடாமல் எப்போதாவது சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

57
அன்னாச்சி பழம்
Image Credit : Getty

அன்னாச்சி பழம்

அன்னாச்சி பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். ஆனால் இதில் அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளதால் உடலில் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கும். இதனால் எடை இழப்பு இலக்கு பாதிக்கப்படும். எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் அன்னாச்சி பழத்தை தவிர்ப்பது நல்லது.

67
மாதுளை
Image Credit : Pinterest

மாதுளை

மாதுளையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை கொடுப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் மாதுளை சாப்பிடலாம். ஆனால் உடற்பயிற்சிக்கு பிறகு மாதுளை சாப்பிட்டால் அதில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்திவிடும் இதனால் எடையும் அதிகரிக்கும்.

77
அவகேடோ
Image Credit : Getty

அவகேடோ

அவகேடோ பழம் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். ஆனாலும் இதில் அதிக அளவு கலோரிகள் உள்ளதால், மிதமான அளவில் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இதை மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
பழங்களின் ஆரோக்கிய நன்மைகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Related Stories
Recommended image1
Weight Loss : ஆப்பிள் vs வாழைப்பழம் : எடையை குறைக்க எந்த பழம் சாப்பிடனும்?
Recommended image2
Weight Loss Diet : உணவில் ஒரே ஒரு மாற்றம்தான்; வெறும் 3 மாதங்களில் '18' கிலோ எடை குறைத்த பெண்.. இதுதான் சீக்ரெட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved