உடற்பயிற்சி தான் ஆரோக்கியம்.. ஆனா 'இவங்க' கண்டிப்பா செய்யக்கூடாது!
Workout : உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் செய்யவே கூடாது. அதற்கான காரணங்கள் இங்கே.

உடற்பயிற்சி தான் ஆரோக்கியம்.. ஆனா 'இவங்க' கண்டிப்பா செய்யக்கூடாது!
தினமும் உடற்பயிற்சி செய்வது நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சொல்லப்போனால் இது உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் வலுவடையும், உடலும் தளர்வாக இருக்கும். நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் அல்லது உங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைக்க விரும்பினால், தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றுங்கள். ஆனால் உடற்பயிற்சி எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு நன்மை பயக்கும் என்றால் கண்டிப்பாக இல்லை. ஏன் தெரியுமா? ஆம், நிபுணர்களின் கூற்றுப்படி உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வது தவிர்க்க வேண்டும். அது யாரெல்லாம் என்பதைக் குறித்து இங்கு காணலாம்.
தலைவலி:
நிபுணர்களின் கூற்றுப்படி, தலைவலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் பலர் தலைவலி இருக்கும்போது கூட உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்ப்பதில்லை. இப்படி செய்தால் நரம்பு மண்டலத்தில் மோசமான விளைவு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் தலைவலி பிரச்சினை அதிகரிக்கும். உயரத்த அழுத்தம் அல்லது உடலில் நீச்சத்து குறைவால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது இத்தகைய சூழ்நிலையில் உங்களது உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு தேவை. ஓய்வில்லாமல் செய்தால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே தலைவலி இருந்தால் நீங்கள் ஒருபோதும் உடற்பயிற்சி செய்யவே கூடாது.
உடல் காயங்கள்:
சில சமயங்களில் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் இழுக்கப்பட்டு காயம் ஏற்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், காலில் காயம் ஏற்பட்டால் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் பலர் இந்த சூழ்நிலையிலும் உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால், அப்படி செய்யும் போது காலில் ஏற்பட்ட காயம் குணமாக அதிக நேரம் எடுக்கும். மேலும் பிரச்சனையும் அதிகரிக்கும். எனவே உடலில் காயம் இருக்கும் போது ஒரு போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.
இருமல், சளி மற்றும் காய்ச்சல்
உங்களுக்கு இருமல் சளி, காய்ச்சல் மற்றும் லேசான உடல் வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்தால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி முன்பே விட ரொம்பவே பலவீனமடையும். இதனால் தொற்று நோயிலிருந்து நீங்கள் மீள்வதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக குணமடையும் வரை உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது தான் நல்லது.
இதையும் படிங்க: உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா? நிபுணர்கள் பதில்!
தூக்கமின்மை:
நீங்கள் போதுமான அளவு சரியாக தூங்கவில்லை என்றால் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தூக்கமின்மை உடல் மற்றும் மனம் என இரண்டிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த சமயத்தில் தான் தசைகள் சுறுசுறுப்பாகின்றன. எனவே இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடற்பயிற்சி செய்தால் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளன.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி.. கூடுதலாக உடல் எடையை குறைக்குமா?
அறுவை சிகிச்சை:
நீங்கள் உடலில் ஏதாவது அறுவை சிகிச்சை செய்திருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் உடற்பயிற்சி ஒருபோதும் செய்ய வேண்டாம். ஏனெனில் அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலானது பழைய நிலைமைக்கு திரும்பி வர அதிக நேரம் எடுக்கும். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு மற்றும் உடலின் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் லேசான உடற்பயிற்சி தான் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, உடற்பயிற்சியை அளவாக எடுத்துக் கொண்டால்தான் அதன் பலன்களை முழுமையாக பெற முடியும். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால் தசைகள் சேதமடையும்.