உடலுறவின்போது ஆணுறை கிழிந்தால் எய்ட்ஸ் வருமா? இனி இதையும் நோட் பண்ணுங்க!
மற்ற விலங்குகளைப் போல மனிதர்கள் காமத்தை வெறுமனே இனப்பெருக்கத்திற்காக மட்டும் செய்வதில்லை. அதில் இன்பம் கண்டு பழகிவிட்டார்கள்.
காமத்தில் இன்பம் கண்டதால் பல நிலைகளில் வித்தியாசமாக உறவு வைத்து கொள்ளவும் மனிதர்கள் விரும்புகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காமம் குறித்த இன்பம் அளாதியாகவே கிடைக்கும். சிலர் குழந்தைகள் பெற்று கொள்ள விரும்புவதில்லை. சிலர் பாதுகாப்பான உடலுறவிற்காகவும் காண்டம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த ஆணுறை பாதியில் சேதமாகும்போது பதறிவிடுகிறார்கள். காண்டம் ஓட்டையாகவோ அல்லது பாதியில் கிழிந்தும் போனால் இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு ஆணுறை 85 விழுக்காடு கருத்தரிக்கும் வாய்ப்பை குறைக்கும். காண்டம் பால்வினை நோய்கள் பரவாமல் தடுக்கும்.
இதையும் படிங்க; Extra marital affairs: உங்கள் கணவருக்கு இன்னொரு பெண் மீது விருப்பமா? இதுதான் காரணம்!
சிலர் காண்டம் கிழிவது குறித்து மிகவும் அச்சப்படுகிறார்கள். பெண்ணுறுப்பிலே அந்த காண்டம் தங்கிவிடுமோ என அஞ்சி தவிக்கிறார்கள். கருத்தரிப்போமா? உள்ளேயிருக்கும் காண்டம் என்ன ஆகும் மாதிரியான பல சந்தேகங்கள் உள்ளன. அது குறித்து இங்கு காணலாம்.
முன்பின் அறிமுகம் இல்லாத நபரோடு உறவு கொள்ளும்போது காண்டம் கிழிந்தால் பயப்படுவது நியாயமானதுதான். இதனால் 20க்கும் அதிகமான பால்வினை நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சிலர் இரண்டு ஆணுறைகளை அணிந்து கொள்கின்றனர். ஆனால் இப்படி அணிவதால் உடலுறவின் போது அதிக உராய்வை ஏற்படுத்துகிறது. இதனால் மீண்டும் ஆணுறை கிழிய வாய்ப்புள்ளது. இதனால் விந்தணு பெண்ணுறுப்புக்குள் செல்ல வாய்ப்பு ஏற்படும். ஆகவே இரண்டு ஆணுறை அணிவது நல்ல தேர்வு அல்ல.
சிலர் உடலுறவில் உச்சக்கட்டத்தை எட்டுவதற்காக காண்டம் சேதமானாலும் தொடர்ந்து உறவு கொள்கின்றனர். இதனால் பெண்ணுறுப்புக்குள் விந்தணு செல்லக் கூடும். கருத்தரிக்க வாய்ப்பை உண்டாக்கும். எனவே காண்டம் பாதியில் சேதமானால் உடலுறவு கொள்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
உடலுறவு கொள்ளும்போது காண்டம் கிழிந்தால் உடனடியாக அதனை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பெண்ணுறுப்பு மட்டுமின்றி ஆணுறுப்பையும் 4 அல்லது 5 முறை நன்றாக கழுவி சுத்தப்படுத்திவிட்டுதான் உறவு கொள்ள வேண்டும். இதுவே சிறுநீர் பாதை தொற்று உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். அறிமுகம் இல்லாத நபரோடு உறவு வைத்தவர்கள் அதன் பிறகு எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்க்கான சோதனையை மேற்கொள்ளலாம். யாரேனும் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியானாலும் உறவில் ஈடுபட்ட இன்னொருவர் 72 மணி நேரத்தில் தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும்.
காண்டம் பாதியில் சேதமாகி விந்தணுக்கள் கருப்பைக்கு சென்றிருக்குமோ என அஞ்சினால் கருத்தடை மாத்திரைகளை உண்டால் போதும். கருத்தரிக்காது. காலாவதியான காண்டங்களை பயன்படுத்தினால் உடலுறவின் போது ஆணுறை சேதமாக வாய்ப்புள்ளது. ஒருமுறை பயன்படுத்திய காண்டத்தை மறுமுறை பயன்படுத்தினாலும் சேதமாக வாய்ப்புண்டு. அவற்றை சூரிய ஒளிபடும் இடங்களில் வைக்கக்கூடாது. தரமான காண்டங்கள் பயன்படுத்தாமல் போனாலும் இந்த சிக்கல் ஏற்படலாம். அதனால் காலாவதியாகும் நேரம், காண்டத்தின் தரம், பயன்படுத்தும் வழிமுறை ஆகியவற்றை கவனமாக பார்த்து உறவுக்கு தயாரானால் வீண் சிக்கலை தவிர்க்கலாம்.
இதையும் படிங்க; Happy new year wishes 2023: பிரியமானவர்களுக்கு பிரியங்கள்... இதோ உங்களுக்கான புத்தாண்டு வாழ்த்து குறிப்புகள்!