- Home
- உடல்நலம்
- Radish Benefits : அடிக்கடி 'முள்ளங்கி' சாப்பிடுவீங்களா? அப்ப இந்த பிரச்சனை உங்க கிட்ட கூட வராது!! முள்ளங்கியின் மகிமைகள்
Radish Benefits : அடிக்கடி 'முள்ளங்கி' சாப்பிடுவீங்களா? அப்ப இந்த பிரச்சனை உங்க கிட்ட கூட வராது!! முள்ளங்கியின் மகிமைகள்
தினமும் உங்களது உணவில் முள்ளங்கி சேர்த்துக் கொண்டால் சில அற்புதமான பலன்களை பெறுவீர்கள். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Radish Benefits
முள்ளங்கி மண்ணுக்கு அடியில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எடை இழப்பு முதல் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் வரை என அனைத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும். இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் கீழ்காணும் அற்புத பலன்களை பெறலாம். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
முள்ளங்கியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
முள்ளங்கியில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மிக அதிகமாக உள்ளன. நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இது தவிர பொட்டாசியம், கல்சியம், மக்னீசியம், ஜிங்க், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஊட்டச்சத்துக் கொள்ளும் முள்ளங்கியில் இருக்கின்றது.
முள்ளங்கியை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் :
- இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கி குடல் மற்றும் செரிமான மண்டலத்தை சீராக இயக்கும்.
- கல்லீரலில் இருக்கும் கொழுப்பை கரைக்க இது பெரிதும் உதவும்
- முள்ளங்கி கால்சியத்தின் நல்ல ஆதாரம் என்பதால், அது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
- காய்ச்சல், தொண்டை வீக்கம், பசியின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய முள்ளங்கி உதவும்.
- முள்ளங்கியில் நீச்சத்து அதிகமாக உள்ளதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
முள்ளங்கியை உணவில் சேர்க்கும் வழிகள் :
முழங்கிய தினமும் உணவில் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக..
- வரத்திற்கு இரண்டு நாட்கள் சாம்பாரில் சேர்க்கலாம்.
- கத்தரிக்காய் புளிக்குழம்பு வைப்பது போல முள்ளங்கியிலும் புளிக்குழம்பு வைக்கலாம்.
- முள்ளங்கியில் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.
- முள்ளங்கியை சாலட்டாக சாப்பிடலாம்.
- முள்ளங்கியிலிருந்து சாற்றை எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
முள்ளங்கியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

