- Home
- உடல்நலம்
- Shaky Hands : அடிக்கடி கை நடுக்கம் வருதா? இந்த '6' பிரச்சனைகள் காரணமா இருக்கலாம்! கவனிச்சு பாருங்க
Shaky Hands : அடிக்கடி கை நடுக்கம் வருதா? இந்த '6' பிரச்சனைகள் காரணமா இருக்கலாம்! கவனிச்சு பாருங்க
சிலருக்கு சில சமயங்களில் கைகள் நடுங்கும். அது ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.

Shaky Hands Causes
நீங்கள் எப்போதாவது உங்களுடைய கைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று யோசித்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் வரும். நம்முடைய கைகள் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருப்பது மிகவும் அவசியம். சாப்பிடுவது, ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது, எழுதுவது என பல விஷயங்களுக்காக நாம் நம்முடைய கைகளுக்கு வேலை கொடுக்கிறோம். எனவே அதை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வது நம்முடைய கடமை. இத்தகைய சூழ்நிலையில், சிலருக்கு அடிக்கடி கைகள் நடுங்கும். நடுக்கம் ஏற்படுவது ஏன்? அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பதட்டம்
பதட்டம் கைகள் நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பதட்டம் ஏற்பட்ட பிற்கு கைகள் நடுங்குவதில்லை. அதாவது பதட்டத்தை தூண்டும் பயம், இரத்த அழுத்தம், சோர்வு போன்றவை தான் பதட்டத்தை அதிகரிக்க செய்யும்.
ஆல்கஹால்
6 ஆறு மணி ஆனாலே சரக்கு அடிக்கலைன்னா கை நடுங்க ஆரம்பிக்கும்என்று சிலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைக் கூட நாம் நகைச்சுவையாக நினைத்து இருப்போம். ஆனால் அது நகைச்சுவை அல்ல அது உண்மைதான். அதாவது ஒரு நபர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை இல்லாமல் தொடர்ந்து மது அருந்து கொண்டிருந்தால் அவருக்கு இந்த கை நடுக்க பிரச்சனை ஏற்படும்.
குறைந்த இரத்த சர்க்கரை
உடலில் தேவையான அளவைவிட குறைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்தால் அது ஆபத்தானது. எந்த அளவிற்கு என்றால், கை நடுக்கத்தை ஏற்படுத்துமாம். ஆமாங்க ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது கை நடுங்க ஆரம்பிக்கும்.
ஹைப்பர் தைராய்டிசம்
இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு கைகள், விரல்கள் அதிகமாக பாதிக்கப்படுமாம். அதனால் கைகள் நடுக்கம் ஏற்படும் என்று சொல்லப்படுகின்றது.
நரம்பு கோளாறுகள்
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகள் பல நரம்பு கோளாறுகளை உண்டாக்கும். அவற்றில் கை நடுக்கமும் உண்டு என்று நிபுணர்கள்.
பர்கின்சன் நோய்
பொதுவாக பர்கின்சன், அல்சைமர் போன்ற நோய்கள் வயது முதிர்வு காரணமாக தான் ஏற்படும். அதிலும் குறிப்பாக இந்த பர்கின்சன் நோய் ஏற்படும்போது எலும்பு, நரம்பு வலிமை குறைந்து விடும். இதனால் கை நடுக்கம் ஏற்படும்.