Leg Pain : ''கால் வலியா?'' - அலட்சியம் வேண்டாம்! - சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே!!
ஆரம்ப காலத்தில் கால்கள் லேசாக வலிக்க ஆரம்பித்து, பின்னர் நாளாக நாளாக தாங்க முடியாத வலியை உண்டாக்கும். இந்த கால் வலிக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள் இங்கே இந்தப் பதிவில் காணலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வை கால் வலி என்பதை சாதாரணமாக கொண்டிருக்கிறார்கள். தினமும் இந்த கால் வலியை வழக்கமாகவே கொண்டிருப்பவர்களும் உண்டு. கால்வலி மந்தமாகவோ, கடுமையாகவோ, கூர்மையாகவோ இருக்கலாம். முறையான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வலிகளில் வித்தியாசம்
கால் வலி வருவதற்கான காரணங்கள் பல உண்டு. ஊட்டச்சத்து குறைபாடு, தசை பிடிப்பு, பலவீனமான தசை, நின்று கொண்டே இருப்பது, நரம்பு சார்ந்த பிரச்சனைகள், சில சமயங்களில் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் கூட இந்த கால்வலி பிரச்சனையை உண்டாக்கும். ஆரம்ப காலத்தில் கால்கள் லேசாக வலிக்க ஆரம்பித்து, பின்னர் நாளாக நாளாக தாங்க முடியாத வலியை உண்டாக்கும். இந்த கால் வலிக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள் இங்கே இந்தப் பதிவில் காணலாம்.
leg pain
ஒரு கடாயில் அரிசியைப் போட்டு சூடாக்க வேண்டும். பின்னர், அதை ஒரு துணியில் போட்டு கட்டி, வலியுள்ள கால் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். நாளொன்றுக்கு 2-3 முறை தொடர்ந்து செய்து வந்தால், கால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். நல்ல மாற்றத்தைக் காண இந்த செயலை தொடர்ந்து ஒரு வாரம் தவறாமல் செய்ய வேண்டும்.
ஒரு ஸ்பூன் வின்டர்க்ரீன் எண்ணெயுடன் 4 ஸ்பூன் வெஜிடேபிள் எண்ணெய் மற்றும் வைட்டமின் E எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த எண்ணெய் கலவையை பாதிக்கப்பட்ட காலில் தடவி சிறிது நேரம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நாள்தோறும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், கால் வலி சரியாகும்.
ஒரு பெரிய வாளியில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பி, அதில் 1 கப் எப்சம் உப்பை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் இரண்டு கால்களையும் 15-20 நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். இந்த முறையை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கால் வலி மெல்ல மெல்ல குறையும்.
யோகாசனங்களின் மூலமும் கால் வலியில் இருந்து விடுபடலாம். கால் வலி போக, சர்வங்காசனத்தை தினமும் செய்வது நல்லது. அதனுடன், சாவாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றையும் சேர்த்து செய்து வந்தால் கால் வலி முற்றிலும் இல்லாமல் போகும்.
Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!
கால் வலி கொண்டவர்கள் வைட்டமின் டி நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுவது நல்லது. முக்கியமாக அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு சிறிது நேரம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்துவர, கால் வலி குறையும்.
உலர் பழங்கனான உலர் திராட்சை, ப்ளம்ஸ், நட்ஸ் மற்றும் தக்காளி ஜூஸ் போன்றவற்றை குடியுங்கள். ஏனெனில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், கால் வலி வருவது தடுக்கப்படும். இதனால் தான் கால் வலி என்று வருபவர்களுக்கு, மருத்துவர்களும் பெரும்பாலும் பொட்டாசிய மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள்.
Saffron Benefits : சிவப்பு தங்கம் ''குங்கும்ப்பூ''-வின் நன்மைகள் Vs தீமைகள்!