- Home
- உடல்நலம்
- Walking for Diabetes : சர்க்கரை நோயாளிகளே! வாக்கிங் போறப்ப 'இதை' செஞ்சாதான் சுகர் கட்டுக்குள் வரும்!! முக்கிய தகவல்
Walking for Diabetes : சர்க்கரை நோயாளிகளே! வாக்கிங் போறப்ப 'இதை' செஞ்சாதான் சுகர் கட்டுக்குள் வரும்!! முக்கிய தகவல்
சர்க்கரை நோயாளிகள் தினமும் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Walking for Diabetes
இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகிவிட்டது. சர்க்கரை நோயாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களளை செய்ய வேண்டும். மேலும் சர்க்கரை நோய் சிக்கலை தவிர்க்க ஆரோக்கியமான உணவு முறையையும் கையாள வேண்டும். இதனுடன் நடைபயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஆம், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு அடிகள் நடக்கலாம்?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். இதற்கு நடைபெற்று போன்ற எளிமையான உடல் செயல்பாடுகளை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு சுமார் 10,000 அடிகள் நடக்கலாம்.
எப்போது நடக்கலாம்?
சர்க்கரை நோயாளிகள் தினமும் 30 நிமிடங்கள் ஆவது கண்டிப்பாக நடக்க வேண்டும். ஆனால் ஒரே நேரத்தில் அல்ல. காலை நேரம் 10 நிமிடம், மதிய வேளை 10 நிமிடம் மற்றும் மாலை நேரம் 10 நிமிடம் என்று மூன்று வகையாக பிரித்து நடக்கலாம். ஆனாலும் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை பொறுத்து உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி செய்யும் முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் :
- சர்க்கரை நோயாளிகள் தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் உடலில் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், குறைக்கவும் உதவும்.
- வாக்கிங் செல்லும்போது செயல்படும் அசைவுகள் தசை சுருக்கங்கள், இரத்த ஓட்டத்தை தூண்டும்.
- உணவுக்குப் பிறகு விறுவிறுப்பான நடைபயிற்சி செல்வது இரத்த சர்க்கரை குறைக்க உதவும்.
- சர்க்கரை நோயாளிகள் தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம் இரவு நன்றாக தூங்கலாம்.
- சர்க்கரை நோய் உள்ளவர்களின் மன அழுத்தத்தை குறைக்க நடைபயிற்சி உதவும்.
- தினமும் நடைபயிற்சி செய்வதால் இரத்த அழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்பும் குறையும். இதனால் இதய ஆரோக்கியமாக இருக்கும்.
இது போன்ற ஏராளமான நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
