தினமும் வாக்கிங் போறீங்களா? உங்க காலடிகளை காசாக மாற்றும் 'ஆப்' பற்றி தெரியுமா?
இந்தியாவில் நடைபயிற்சிக்கு சலுகைகள் வழங்கும் சில செயலி (ஆப்) குறித்து இங்கு காணலாம்.

These Apps Pay For Walking : கரும்பு தின்னக் கூலியா? நடைபயிற்சி நம் உடலுக்கு நன்மை செய்யக் கூடிய பயிற்சியாகும். அதை செய்யும்போது நம்மால் சில வெகுமதிகளை பெற முடியும் என்றால் சும்மா விடலாமா? நிச்சயம் முயன்று பார்க்கலாம் தான். பெரும்பாலும் நடைபயிற்சிக்கு பணம் செலுத்தும் செயலிகள் வெளிநாடுகளை சேர்ந்தவையாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை அதிக பணம் செலுத்தக் கூடிய செயலிகள் இல்லையென்றாலும், சில சலுகைகளை வழங்கும் செயலிகள் உள்ளன.
நடைபயிற்சி
உதாரணமாக அடிடாஸ் செயலியில் நீங்கள் ரன்னிங் சேலஜ்ச் நிறைவு செய்தால், தினமும் ரன்னிங் செய்தால் அடிடாஸ் வழங்கும் கூப்பன்கள் மூலம் அடிடாஸ் பொருள்களை சலுகையில் வாங்க முடியும். அதைப் போலவே ஸ்வெட்காயின் பரவலாக பேசப்படும் மற்றொரு செயலியாகும். இது தவிர இன்னும் சில செயலிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
நடைபயிற்சியில் ஓடலாமா?
வெகுமதி! வெகுமதி!
தினமும் நடைபயிற்சி, ஓடுதல் பயிற்சிகளை செய்பவர்களுக்கு ஸ்வெட்காயின், ஸ்டெப்செட்கோ, வின் வாக், கேஷ் வாக் ஆகிய செயலிகள் நடைபயிற்சி சவால்களையும், சில போட்டிகளை வைக்கின்றன. அதன் முடிவில் வெகுமதிகள் கொடுக்கப்படுகின்றன.
நடைபயிற்சிக்கு சலுகைகள் வழங்கும் செயலி
ஸ்வெட்காயின் (sweatcoin)
நடைபயிற்சிக்கு சலுகைகள் வழங்குவதில் இந்த செயலி பிரபலமானது. இதில் பெறும் பாயிண்டுகளுக்கு பயனர்கள் விலையுர்ந்த பிராண்டட் தயாரிப்புகள், மின்னணுவியல், பணம் ஆகிய விஷயங்களுக்கு ஸ்வெட்காயின்களை பயன்படுத்தலாம். இதில் இன்னொரு சிறப்பு பயனர்கள் தங்களுடைய ஸ்வெட்காயின்களை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகவும் கொடுக்க வழி செய்துள்ளது.
ஸ்வெட்செட்கோ (Sweatsetgo)
இந்த செயலி நடைப்பயணத்தை சுவாரசியமாக்க உதவுகிறது. இதில் சிறந்த தள்ளுபடிகளைப் பெற உங்களுடைய நண்பர்களுக்கு சவால் விட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்று சலுகைகளை பெற வேண்டும். இதனால் உங்களுக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கும்.
நடைபயிற்சி பந்தயம் கட்டலாம்
ஸ்வெட்பெட் (Sweatbet)
இந்த செயலியில் பயனர்கள் சவால்களை ஏற்று இலக்குகளை அடைய வேண்டும். இலக்குகளை அடைவதற்கு பந்தயம் கட்டலாம். நீங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்றால் அதன் ஒரு பங்கை பெறலாம்.
வின் வாக்: (Winwalk)
வின் வாக் (Winwalk) இந்த செயலில் உங்களுடைய ஒவ்வொரு அடிகளையும் கண்காணித்து, நீங்கள் இலக்குகளை அடையும்போது பரிசு அட்டைகளை வெகுமதியாக தருகிறது. நீங்கள் அதை பயன்படுத்தி வேண்டிய பொருள்களை வாங்கலாம்.
கேஷ் வாக் என்றால் என்ன?
கேஷ் வாக் (CashWalk)
இந்த செயலியும் வின்வாக் போன்றதுதான். உங்களுடைய அடிகளைக் கண்காணித்து அதற்கேற்ப பண வெகுமதிகளை அள்ளித்தரும். இதன் மற்றொரு சிறப்பம்சம் கூடுதல் வருவாய்க்கு வீடியோக்களைப் பார்க்கும் விருப்பமும் இந்த செயலியில் காணப்படுகிறது.
நீங்கள் தினமும் நடப்பவராக இருந்தால் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.