- Home
- உடல்நலம்
- Silent Heart Attack : மாதவிடாய் நின்றால்... இவ்ளோ பாதிப்பா? பெண்களுக்கு மாரடைப்பு வர்றப்ப இந்த அறிகுறிதான் முதல்ல வரும்
Silent Heart Attack : மாதவிடாய் நின்றால்... இவ்ளோ பாதிப்பா? பெண்களுக்கு மாரடைப்பு வர்றப்ப இந்த அறிகுறிதான் முதல்ல வரும்
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படாமல் இருக்க என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கு காணலாம்.

Signs of Silent Heart Attacks in Women
ஆண்களை போல இல்லாமல் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வேறு மாதிரியான காரணங்கள் உள்ளன. பொதுவாக மாரடைப்பு ஏற்பட திடீரென கடுமையான மார்பு வலி வருவது காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இப்படியான வெளிப்படையான அறிகுறிகள் வருவதில்லை. அதனால் பலரும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
Silent Heart Attacks in Women
ஆண்களுக்கு ஏற்படும் அளவுக்கு பெண்களுக்கு கடுமையான மார்பு வலி ஏற்படாது. பெண்களுக்கு மாரடைப்பு வந்தால் மார்பில் அழுத்தம், இறுக்கமான உணர்வு அல்லது அசௌகரியமாக உணர்வார்கள். தாடை, கழுத்துப் பகுதி, தோள்கள், மேல் முதுகு அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியமாக உணர்வார்கள்.
அறிகுறிகள்
பல பெண்களுக்கு மாரடைப்பு எந்த வலியும் இல்லாத அறிகுறிகளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் மூச்சுத் திணறல், மார்பு வலி இல்லாமல் சொல்லமுடியாத சோர்வு வரலாம். குமட்டல், வாந்தி, இரைப்பை குடல் நோய் வரலாம். அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி வரக் கூடும். வியர்வையில் கூட மாற்றம். இதைக் கவனித்து மருத்துவரை அணுகி உடனடி சிகிச்சைப் பெற வேண்டும்.
காரணங்கள்
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவதால் இந்த நோய் ஆபத்து அதிகரிக்கலாம். சர்க்கரை நோய் ஆண்களை விடபும் பெண்களுக்கு மாரடைப்பு வருகிற ஆபத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், டிஸ்லிபிடெமியா ஆகியவை காரணமாக இருக்கலாம். அதிக நேரம் அமர்ந்த நிலை வாழ்க்கை முறை, உடல் பருமன், மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை காரணமாக இருக்கலாம்.
தடுக்கும் முறை
ஆரம்ப அறிகுறிகளில் மருத்துவரை அணுக வேண்டும். நல்ல உணவுப் பழக்கம் இருப்பது அவசியம். நல்ல கொழுப்புகள், புரதம், தாதுக்கள் உள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். தினமும் உடற்செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அதிக நேரம் அமர்ந்த நிலையில் இருக்காமல் அவ்வப்போது நடப்பது நல்லது. தினமும் காலை, மாலை ஆகிய இருநேரங்களிலும் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.