- Home
- உடல்நலம்
- Silent Heart Attack : நெஞ்சு சுத்தமா வலிக்காது! ஆனா இந்த '5' அறிகுறிகள் இருந்தா அது மாரடைப்பு தான் தெரியுமா?
Silent Heart Attack : நெஞ்சு சுத்தமா வலிக்காது! ஆனா இந்த '5' அறிகுறிகள் இருந்தா அது மாரடைப்பு தான் தெரியுமா?
சைலன்ட் மாரடைப்பின் சாதாரண அறிகுறிகளை இங்கு காணலாம்.

மாரடைப்பு என்றாலே திடீர் மார்பு வலி, வியர்வை போன்றவை தான் மக்கள் மனதில் எழுகின்றது. உண்மையாக பல மாரடைப்புகள் அமைதியாக ஏற்படுகின்றன. வெளிப்படையான மாரடைப்பு மாதிரியே இவையும் ஆபத்துதான். ஐந்தில் 1 மாரடைப்பு அமைதியானதுதான். இதை சைலன்ட் மாரடைப்பு என்கிறார்கள். மாரடைப்பு வரும் முன்பே அதற்கான சில அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும். ஆனால் மக்கள் அறியாமையால் அதை புறக்கணிக்கின்றனர். இந்தப் பதிவில் சைலன்ட் மாரடைப்புக்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.
சைலன்ட் மாரடைப்பு வரும் முன்பு சொல்லி விளக்க முடியாத சோர்வு ஏற்படும். இது ஆரம்ப அறிகுறியாகும். எவ்வளவு ஓய்வெடுத்தாலும் கொஞ்சமும் சோர்வு நீங்காமல், அசௌகரியமாக இருந்தால் அதை அலட்சியம் செய்யக்கூடாது.
மார்பில் அழுத்தம், கனத்தன்மை ஏற்படலாம். சிலர் இந்த அறிகுறியை யாரோ மார்பில் அமர்ந்திருப்பது போல் உணர்வதாக சொல்கிறார்கள். அவ்வளவு கனமாகவும், இறுக்கமாகவும் உணர்வுகள் இருக்கும். சிலர் இப்படி இருப்பதை வாயு அல்லது அஜீரணம் என நினைத்து கொள்கிறார்கள். கொடூரமான வலி ஏற்படாததால் மக்களும் அஜீரணம் என அலட்சியம் காட்டுகின்றனர்.
சின்ன வேலைகளை செய்யக்கூட ஆற்றல் இருக்காது. நடைபயிற்சி, படியில் ஏறுதல், பொருள்களை எடுத்துச் செல்தல் ஆகிய சமயங்களில் சுவாசிக்கவே சிரமமாக இருக்கும். ஏனென்றால் இதயம் செயல்பட திணரும். நுரையீரல் அழுத்தத்தையும் உணருவதால் மூச்சுத் திணறலும் ஏற்படும். திடீரென இப்படி மூச்சு விடுவதில் சிரமம் வந்தால் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது.
சைலன்ட் மாரடைப்பு எதிர்பார்க்கும் இடத்தில் வலியே இருக்காது. மார்புக்குப் பதில் முதுகு, கழுத்து, தாடை, கைகளில் வலி வரலாம். மந்தமான வலி, தசை விறைப்பு ஆகியவை ஏற்படும். இப்படி அசாதாரண வலி வந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
வியர்வை, திடீரென தலைச்சுற்றல், மன அழுத்தம், நீரிழப்பு அறிகுறிகளாக இருக்கும். குறிப்பிட்ட காரணம் இல்லாமல் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அது சைலன்ட் மாரடைப்பைக் குறிக்கலாம். முக்கிய உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராக அனுப்ப முயற்சி செய்யும் போது அதிகமான வியர்வை வெளியேறுகிறது.