நெஞ்சு பகுதி குத்துவது போன்று இருக்கிறதா? அப்படியானால் அது வெறும் வாயு தொல்லையா? அல்லது மாரடைப்பின் அறிகுறியா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நெஞ்சு வலி திடீரென்று இருந்தால் நாம் எல்லோருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனென்றால் அது மாரடைப்பு என்று தான் நாம் நினைப்போம். ஆனாலும் அந்த சூழ்நிலையில் ஏற்படும் பதட்டத்தின் காரணமாக வழி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலும் எல்லா விதமான நெஞ்சுவலியும் இதயத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் சில சமயங்களில் வாயு, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை போன்ற காரணத்தினாலும் நெஞ்சுவலி ஏற்படும். இந்த வலி சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும். இந்த வலியை வாக்கிங் செல்லுதல், ஏப்பம், வாயு போன்றவத்தின் மூலம் சரி செய்துவிடலாம். இருப்பினும் சில சமயங்களில் உடலின் மிக முக்கியமான பகுதியில் ஏற்படும் வலியை அசால்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும். சரி இப்போது மாரடைப்பு மற்றும் வாயுவால் வரும் நெஞ்சுவலியை வேறுபடுத்தும் 5 வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. பிற பகுதியில் வலி:
மாரடைப்பு வலி :
இந்த வலியானது பொதுவாக நெஞ்சின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் தான் ஏற்படும். அழுத்தம், இறுக்கம், மார்பு கனமாக இருப்பது போன்ற உணர்வு இதுபோன்ற அறிகுறிகள் அந்த பகுதியில் ஏற்படும். மேலும் இந்த வலியானது இடது கை, கழுத்து, முதுகு, தோள்பட்டை, தாடை போன்ற உடலின் மற்ற பகுதிகளிலும் பரவும்.
வாயுவால் ஏற்படும் வலி :
வாயு தொல்லையால் மார்பு வலித்தால் தசைப்பிடிப்பு, குத்துவது போல இருக்கும். இந்த அறிகுறிகள் அல்லது பொதுவாக மேல் வயிறு அல்லது கீழ் மார்பில் உணரப்படும். ஆனால் இந்த வலியானது மாரடைப்பு போல உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவாது.
2. கால அளவுகள் :
மாரடைப்பு வலி :
மாரடைப்பால் ஏற்படும் பலியானது நீண்ட நேரம் நீடிக்கும். இந்த வலியானது பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் நீடித்து வந்து போகலாம். இப்படி தொடர்ந்து நீடித்தால் காலப்போக்கில் மோசமடையும்.
வாயுவால் ஏற்படும் வலி ;
வாய்வல் ஏற்படும் வலியானது தற்காலிகமானதே. ஏப்பம், வாயு வெளியேற்றம் மற்றும் குடல் இயக்கத்திற்கு பிறகு இந்த வலி மறந்து விடும். இந்த வலியை குறைக்க நீங்கள் உட்காரும் அல்லது படுத்திருக்கும் தோரணையை மாற்ற வேண்டும். மேலும் வயிற்றிலே லேசான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இது தவிர சிறிது நடைப்பயிற்சி கூட செய்யலாம்.
3. அறிகுறிகள் :
மாரடைப்பு வலி :
நெஞ்சு வலியுடன் மூச்சு திணறல், தலை சுற்றல், லேசான தலைவலி, குமுட்டல், வாந்தி, படபடப்பு, அதிகமாக வியர்ப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். எனவே நெஞ்சு வலி வரும் போது இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று பிரச்சனைக்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாயு தொல்லையால் ஏற்படும் வலி :
வீக்கம், அதிகப்படியான ஏப்பம், வாயு வெளியேறுதல், வயிறு நிரம்பிய உணர்வு போன்ற அறிகுறிகள் வாயு தொல்லையால் ஏற்படும். மாரடைப்பு வலியால் ஏற்படும் அறிகுறிகள் இது ஏற்படுத்தாது. இருப்பினும் சில சமயங்களில் பதட்டத்தை ஏற்படுத்தும்.
4. காரணங்கள் :
மாரடைப்பு வலி :
பொதுவாக இந்த வலியானது ரத்தம் உறைதல் அல்லது குறுகலான தமனிகள் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும். மேலும் இது உணர்ச்சியால் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் உழைப்பு போன்றவற்றாலும் தூண்டப்படலாம். இந்த வலி சில சமயங்களில் உயிரைக் கூட பறிக்கும்.
வாயுவால் ஏற்படும் வலி :
இந்த வலியானது பொதுவாக செரிமான அமைப்பில் காற்று நிரம்பி அல்லது வாயு இருந்தால் இது ஏற்படும். இதுதவிர சாப்பிடும் போது, குளிக்கும்போது, காரமான மற்றும் கொழுப்பில் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது, அஜீரணம், அமில ரிஃப்ளக்ஸ் போன்றவற்றாலும் இந்த வலி ஏற்படும். ஆனால் இந்த வலி உயிருக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது.
5. மருந்துகள் உண்டா?
மாரடைப்பு வலி :
செரிமான மருந்துகள், அமில நீக்கம் மற்றும் வாயு வெளியேறுதல் போன்ற எந்த மருந்துகளாலும் இந்த வலியை குறைக்கவே முடியாது. இதற்கு இதய ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க உடனடி அவசர சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து.
வாயு வலி :
இந்த வலிக்கு செரிமான மருந்துகள் வாய் வெளியேற்ற மருந்துகள் அமல் நீக்க மருந்துகள் போன்ற மருந்துகளால் இந்த வலியை குறைத்து விடலாம். கூடுதலாக சூடான நீர் குடிப்பது, லேசான நடை பயிற்சி செய்தல் போன்றவற்றால் இந்த வலியை குறைக்க முடியும். மேலும் வாய்வை தூண்டும் உணவை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் இந்த வலி வருவதை தடுக்கலாம்.
