நீண்ட நேரம் ஹெட்செட் பயன்படுத்துவதில் இருக்கும் ஆபத்து- முழு விபரம்..!!
பல்வேறு விஷயங்களுக்கு செவிமடுத்துக் கேட்கும் நாம், செவித்திறனுக்குரிய ஆரோக்கிய நன்மைகளை பேணுவது இல்லை. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், உலக மக்கள் செவித்திறன் பரிசோதனையை மேற்கொள்வது முக்கியம் என்கிற கோரிக்கையை வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் வந்துவிட்டாலே பல்வேறு சமூக நலன் சார்ந்த நாட்கள் அணுசரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மார்ச் 3-ம் தேதி உலக செவித்திறன் தினமாக பின்பற்றப்படுகிறது. செவித்திறன் குறைபாடுகளைத் தடுப்பதற்கும், காது கேளாமைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து தீர்வு காண்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மார்ச் 3-ம் தேதி செவித்திறன் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைமையில் இந்த நாளில் உலகம் முழுவதும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு மார்ச் 3-ம் தேதியை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு முக்கிய வேண்டுகோளை வெளியிட்டுள்ளது. அதன்படி செவித்திறன் தொடர்பான சோதனைகளை நடத்துபவர்கள் மிகக் குறைவு. அதனால் செவி ஆரோக்கியத்தை பேணுவதற்கு, மக்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி செவி பாதுகாப்பில் முன்கூட்டியே செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இருதய நலன் முக்கியம்
எப்போதும் இருதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இருதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை செவித்திறனை பாதிக்கிறது. ரத்த அழுத்தத்துடன் சேர்த்து கொலஸ்ட்ராலையும் கவனித்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் காரணமாகவும் செவித்திறன் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.
ஒலி மாசுபாட்டை தவிர்க்கவும்
இன்று பலரும் வாழ்வாதாரத்தை தேடி பல்வேறு நகரங்களில் குடியிருக்கிறோம். இந்தச் சூழல் ஒலி மாசுபாடு பிரச்னை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதனால் நகரங்களில் வசிப்போர் செவித்திறனில் சற்று கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. அதுமட்டுமின்றி எப்போது பார்த்தாலும் ஹெண்டுஃபோன் போட்டுக்கொண்டு பாடல் கேட்பதை தவிர்க்கவும். ஒருவேளை குறிப்பிட்ட பகுதியில் ஒலி மாசு அதிகமாக இருந்தால், வெறுமனே வேண்டுமானால் ஹெட்டுபோன் போட்டுக்கொள்ளலாம். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹெட்செட் இரைச்சல் ஆபத்து
ஹெட்செட் பயன்படுத்தும் போது அதிக சத்தத்தில் கேட்க வேண்டாம். இரைச்சல் ரத்துசெய்யும் ஹெட்செட்டை' பயன்படுத்த முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். இவை சுற்றுப்புறத்திலிருந்து வரும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கின்றன, எனவே ஹெட்செட்டில் வைக்கப்படும் ஒலியின் அளவை கவனத்துடன் கையாளுவது மிகவும் முக்கியம்.
புகைப்பிடிப்பதும் ஆபத்து தான்
புகைபிடித்தல் என்பது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு கெட்ட பழக்கம். புகைபிடிப்பதாலும் செவித்திறன் பெரிதும் பாதிக்கப்படும். அதாவது, புகையிலை பொருட்கள் இருதயம் மற்றும் நுரையீறலை எளிதில் பாதித்துவிடும். அதனால் செவித்திறனும் பாதிக்கப்படும். இந்த பிரச்னை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, புகையிலை பொருட்களை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படுவது வருந்தத்தக்கது.
பயன் தரும் உடற்பயிற்சி
காது ஆரோக்கியத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் அவசியம். எனவே தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இதனால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதன்காரணமாக போதுமான ஆக்ஸிஜன் காதுகளின் உள் உறுப்புகளுக்கும் இயற்கையாகவே சென்றடைவது குறிப்பிடத்தக்கது.
முன்பு கூறியது போல், காது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் போது கூட, பெரும்பாலான மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சிக்கல் எதிர்காலத்தில் மிகவும் சிக்கலானதாக மாறக்கூடும். எனவே, நீங்கள் சிறிய பிரச்சனைகளை சந்தித்தால், தேவையான சோதனைகளை செய்யுங்கள். முடிந்தால், சீரான இடைவெளியில் காதுகளின் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.