MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வெறும் 100 ரூபாய் சேமித்தால் போதும்! ரூ.2 லட்சத்துக்கு மேல் மொத்தமா கிடைக்கும்!

வெறும் 100 ரூபாய் சேமித்தால் போதும்! ரூ.2 லட்சத்துக்கு மேல் மொத்தமா கிடைக்கும்!

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. இத்திட்டத்தில் வெறும் 100 ரூபாய் சேமித்து ரூ.2 லட்சத்துக்கு மேல் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Nov 19 2024, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Post office recurring deposit scheme

Post office recurring deposit scheme

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) திட்டம் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்கும் சிறுசேமிப்புத் திட்டமாகும். குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து சேமிக்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் பொருத்தமானது. இதில் கூட்டு வட்டி விகிதத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Recurring Deposit

Recurring Deposit

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். திட்டம் முதிர்வு அடையும்போது மொத்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். சிறிய சேமிப்பின் மூலம் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய கார்பஸை உருவாக்க இந்த திட்டம் சிறந்த வாய்ப்பு.

37
Post office scheme

Post office scheme

இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். முதிர்ச்சியடைந்த பிறகு, கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், நாமினி முதிர்வுத் தொகையைப் பெறலாம் அல்லது திட்டத்தைத் தொடரலாம்.

47
Post office recurring deposit

Post office recurring deposit

இந்தத் திட்டத்தின் கீழ், 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படும். இது முதலீட்டாளருக்கு முதிர்வு காலத்தில் அதிக வருமானத்தை அளிக்கிறது. இந்த வட்டி விகிதம் பல வங்கி சேமிப்புத் திட்டங்களை விட அதிகமாகவும் இருக்கிறது.

57
Post office RD Interest rate

Post office RD Interest rate

இந்தத் திட்டத்தில் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். கூடுதலாக, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலர் ஒரு கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல், உங்கள் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.

67
Post office savings schemes

Post office savings schemes

கணக்கு தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50% வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கான வட்டி விகிதம், ரெக்கரிங் டெபாசிட் கணக்கிற்கு வழங்கப்படும் வட்டியை விட 2% கூடுதலாக இருக்கும்.

77
Post office RD investment

Post office RD investment

போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில், தினமும் 100 ரூபாய் சேமித்து ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2.14 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கும். முதலீடு செய்த மொத்தத் தொகை ரூ.1,80,000. வட்டி வருவாய் மட்டும் ரூ.34,097 ஆக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved