- Home
- உடல்நலம்
- Walking Mistakes : தினமும் வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த மிஸ்டேக் பண்ணாதீங்க.. ஒரு பலனும் கிடைக்காது
Walking Mistakes : தினமும் வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த மிஸ்டேக் பண்ணாதீங்க.. ஒரு பலனும் கிடைக்காது
நடைபயிற்சி செய்யும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள். இல்லையெனில் நன்மைக்கு பதிலாக பக்க விளைவுகள் தான் வரும்.

தினமும் வாக்கிங் செல்வது ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. அதாவது இரத்த அழுத்தம் உயர்வதை தடுக்கும், சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்கும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் போன்று எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நடைபயிற்சி செய்வதன் மூலம் பெறலாம். ஆனால் வாக்கிங் போகும்போது கீழ்காணும் தவறுகளை ஒருபோதும் செய்யக் கூடாது. இல்லையெனில், நீங்கள் செய்யும் நடைபயிற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்காது. கூடவே மோசமான பக்க விளைவுகளும் ஏற்படும். இந்த பதிவில் வாக்கிங் போகும் போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
வாக்கிங் செல்லும்போது சிலர் கூன் போட்டு நடப்பார்கள். ஆனால் இப்படி நடந்தால் இடுப்பு தசையில் அதிக அழுத்தம் ஏற்படும். இதனால் முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். எனவே கூன் போட்டு நடக்காமல் உடலை நிமிர்ந்த நிலையில் வைத்து நடக்கவும்.
எப்போது வாக்கிங் சென்றாலும் தலை நிமிர்ந்தபடி தான் இருக்க வேண்டும். ஏனெனில் சிலர் குனிந்த படி நடப்பார்கள். ஆனால், இப்படி நடந்தால் தலையின் மொத்த எடையானது முதுகு தண்டுவடத்தின் மீது விழுந்து முதுகு வலியை ஏற்படுத்தும்.
நடக்கும்போது கை, தோள்பட்டைக்கு வேலை கொடுக்காமல் பலர் நடப்பார்கள். ஆனால், அவற்றிற்கு கொஞ்சம் அசைவு கொடுத்தால் உடலின் அனைத்து தசைகளும் செயல்படும். இதனால் கலோரியும் எரியும்.
வாக்கிங் செல்வதற்கு முன்பு வார்ம்-அப்பும், செய்து முடித்த பிறகு கூல்-டவுன் பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். இவற்றை செய்ய விட்டால் உடல் வலிமையிலிருந்து காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
நடைபயிற்சி செய்பவர்கள் போதுமான நீர்ச்சத்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் அது பெரிய தவறு. ஏனெனில் நடக்கும் போது தசைப்பிடிப்பு, உடல் சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படும். எனவே தினமும் வாக்கிங் செல்பவர்கள் நடப்பதற்கு முன் பின் மட்டுமல்ல நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

