- Home
- உடல்நலம்
- Blood Pressure : இரத்த அழுத்தம் இருக்கா? இப்படி விட்டா உறுப்புகளுக்கு பாதிப்பு இருக்கு; இதை மறக்காம செய்ங்க!
Blood Pressure : இரத்த அழுத்தம் இருக்கா? இப்படி விட்டா உறுப்புகளுக்கு பாதிப்பு இருக்கு; இதை மறக்காம செய்ங்க!
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாவிட்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் வரும். முக்கியமாக சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கியமான உள்ளுறுப்புகள் பாதிக்கும்.

உயர் இரத்த அழுத்தம் ஒட்டுமொத்த உறுப்பு சேதத்தை உண்டாக்கும். உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் தேவை. இரத்த அழுத்தம் சரியாக இல்லாவிட்டால் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் செல்வது சரிவர இருக்காது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளின் பாதிப்பு வரலாம்.
கல்லீரலில் நொதிகள், இஸ்கிமிக் ஹெபடைடிஸ் அதிகரிக்க வாய்ப்பாகிவிடும். மூளையில் குழப்பம், தலைச்சுற்றல் அல்லது மயக்கநிலை ஏற்படுகிறது. இதயத்திற்கு இரத்தத்தின் மூலம் போதுமான ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் இஸ்கெமியா, அரித்மியா அல்லது இதயத் தடுப்பு ஏற்படலாம்.
இரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும் உறுப்பு செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. குறைந்த இரத்த அழுத்தம் சிறுநீரகங்களை பாதிக்கிறது. தொடக்க கால அறிகுறிகளில் குறைந்தளவு சிறுநீர் வெளியேறும்.
உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக அல்லது உயர்வாக இருந்தால் முறையாக மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும்.
எந்த உணவுகள் இரத்த அழுத்ததைக் கட்டுக்குள் வைக்கும்?
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு இருக்கும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். புரதச்சத்து உணவுகள் உண்ண வேண்டும். கீரை வகைகள், பெர்ரி, பீட்ரூட், ஓட்ஸ், பூண்டு, கொழுப்பு உள்ள மீன்கள் நட்ஸ், விதைகள் போன்றவை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக சோடியம், காஃபின், மது போன்றவை இரத்த அழுத்தத்தை மோசமாக்கும். இவற்றை குறைப்பதும் அவசியம்.