MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • High Blood Pressure : உயர் இரத்த அழுத்தமா? இந்த விஷயங்களை தவறாம செஞ்சா கட்டுக்குள் இருக்கும்

High Blood Pressure : உயர் இரத்த அழுத்தமா? இந்த விஷயங்களை தவறாம செஞ்சா கட்டுக்குள் இருக்கும்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Oct 07 2025, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Getty

தற்போது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புகைப்பிடித்தல், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, அதிகமாக மது அருந்துதல், மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது தவிர மரபியல், வயது மூப்பு மற்றும் சில மருந்துகளில் விளைவுகளாலும் இது ஏற்படும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மாரடைப்பு பக்கவாதம் சிறுநீரக நோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்தால் போதும். அதை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். அவை என்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

25
Image Credit : Getty

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியது :

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் முருங்கை இலை ஜூஸ் குடிக்க வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு முருங்கை இலை, சின்ன வெங்காயம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து விட்டு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் மற்றும் உடல் எடையையும் கணிசமாக குறைக்கும்.

Related Articles

Related image1
வாக்கிங் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? உண்மை தகவல்கள் இதோ!!
Related image2
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்துடன் போராடுகிறீர்களா? கட்டுப்படுத்த உதவும் 5 மூலிகைகள் இதோ.!
35
Image Credit : Getty

அதுபோல காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீ குடிக்க வேண்டும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தும் இதை நோய் பாதிப்பை தவிர்க்க உதவும்.

45
Image Credit : Getty

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தங்களது உணவில் மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

55
Image Credit : Getty

அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். மேலும் தினமும் சுமார் அரை மணி நேரமாவது கண்டிப்பாக வாக்கிங், ஜாக்கிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Related Stories
Recommended image1
வாக்கிங் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? உண்மை தகவல்கள் இதோ!!
Recommended image2
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்துடன் போராடுகிறீர்களா? கட்டுப்படுத்த உதவும் 5 மூலிகைகள் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved