MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • drinking enough water : நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா? கண்டறிய 5 எளிய அறிகுறிகள்!

drinking enough water : நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா? கண்டறிய 5 எளிய அறிகுறிகள்!

உடலை எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோமா என்பதை அறிய ஊட்டச்சத்து நிபுணர் கூறும் 5 எளிய அறிகுறிகள் பற்றி  விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Priya Velan
Published : Aug 07 2026, 09:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தோலின் நெகிழ்வுத்தன்மை :
Image Credit : Getty

தோலின் நெகிழ்வுத்தன்மை :

உங்கள் கையின் பின்புறத்தில் உள்ள தோலை லேசாகக் கிள்ளிப் பிடித்து பின் விட்டுப் பாருங்கள். தோல் உடனடியாகப் பழைய நிலைக்குத் திரும்பினால், உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை தோல் பழைய நிலைக்குத் திரும்ப நேரம் எடுத்தால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) இருக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மிருதுவான மற்றும் ஈரப்பதமான உதடுகள் :
Image Credit : Getty

மிருதுவான மற்றும் ஈரப்பதமான உதடுகள் :

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு தோல்கள் உரியத் தொடங்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பவர்களின் உதடுகள் எப்போதும் வறட்சியின்றி, மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.

35
அடிக்கடி தலைவலி வராமல் இருப்பது :
Image Credit : Getty

அடிக்கடி தலைவலி வராமல் இருப்பது :

அடிக்கடி ஏற்படும் தலைவலி அல்லது ஒற்றை தலைவலிக்கு (Migraine) உடலில் நீர்ச்சத்து குறைபாடும் ஒரு முக்கியக் காரணமாகும். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால், நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலிகள் உங்களுக்கு வர வாய்ப்பில்லை.

45
சிறுநீரின் நிறம் (மிதமான மஞ்சள் நிறம்) :
Image Credit : Getty

சிறுநீரின் நிறம் (மிதமான மஞ்சள் நிறம்) :

உடலின் நீர்ச்சத்தைக் கண்டறிய மிகவும் எளிமையான வழி சிறுநீரின் நிறத்தைக் கவனிப்பதாகும். சிறுநீர் லேசான மஞ்சள் நிறத்தில் (Light Yellow / Straw Color) இருந்தால் உடலின் நீர்ச்சத்து சரியாக உள்ளது என்று அர்த்தம். அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீர்ச்சத்து குறைபாட்டையும், முற்றிலும் நிறமற்று தண்ணீர் போல் இருந்தால் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பவதையும் குறிக்கிறது.

55
தண்ணீர் குடித்தவுடனே சிறுநீர் கழிக்காமல் இருப்பது :
Image Credit : Getty

தண்ணீர் குடித்தவுடனே சிறுநீர் கழிக்காமல் இருப்பது :

நீங்கள் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த உடனேயே அவசரமாகக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய சூழல் வராமல் இருக்க வேண்டும். தண்ணீர் குடித்த பிறகு உடலானது அதைச் சிறிது நேரம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை தண்ணீர் குடித்த உடனும் கழிப்பறைக்குச் செல்லும் நிலை இருந்தால், உங்கள் நீர்ச்சத்துப் பழக்கவழக்கத்தைக் கவனிப்பது நல்லது.

குறிப்பு: இந்த 5 அறிகுறிகளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று அறிகுறிகளாவது உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை உயர்த்த வேண்டியது அவசியம்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sweet Potato: பால், வெல்லம், சர்க்கரைவள்ளி - கிழங்கு இவ்ளோ நன்மையா?
Recommended image2
Thick Hair : அடர்த்தியான முடி வளர சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
Recommended image3
Relationship Tips: உறவுகளை மேலும் அழகாக்க 7 சூப்பர் டிப்ஸ்.!
Related Stories
Recommended image1
stomach hurt : சாப்பிட்ட பிறகு வயிறு வலிக்கிறதா? குடல்நோய் நிபுணர் கூறும் 9 முக்கிய காரணங்கள்!
Recommended image2
health : உடலின் வீக்கத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 8 அன்றாட உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved