Sleep Tips : தினமும் இரவு 10 மணிக்குள் தூங்கினால் இவ்ளோ நன்மைகளா?
நீங்கள் தினமும் இரவு 10 மணிக்குள் தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இரவு 10 மணிக்குள் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்?
பகல் முழுவதும் அங்கு இங்கு என்று ஓடி ஒழுங்காக கூட சாப்பிடாமல் கடுமையாக உழைத்து, இரவில் உடல் வலிகள் பல இருந்தும் எதையும் பொருட்படுத்தாமல் நிம்மதியாக தூங்குவது எவ்வளவு நன்றாக இருக்கும். இதைதான் பலரும் விரும்புவார்கள். ஆனால் இந்த கொடுப்பினை எல்லோருக்கும் அமைவதில்லை. சிலர் இரவில் தூங்க முடியாமல் கூட ஆபீஸ் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். மேலும் சிலரோ வேகமான வாழ்க்கை முறையில் இரவு சரியான நேரத்தில் தூங்க முடியாமல் போகிறது. இன்னும் சொல்லப்போனால் இரவு லைட் நைட்டில் தூங்கி பகலில் சீக்கிரமே எழுவது தற்போது சகஜமாகிவிட்டது. ஆனால் இப்படி இரவு தாமதமாக தூங்குவது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில், தினமும் இரவு 10 மணிக்குள் தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
தினமும் இரவு 10 மணிக்குள் தூங்கினால் இதயம் ஆரோக்கியம் மேம்படும். அதாவது, சரியான நேரத்தில் தூங்கினால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும், மனநிலை மேம்படும் மற்றும் உடல் திறனும் அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் போன்ற பிரச்சனைகள் வருவது தவிர்க்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி நமது உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் கட்டுக்குள் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நீங்கள் தினமும் இரவு சரியான நேரத்தில் தூங்கினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தெரியுமா? அதாவது ஆரோக்கியமான தூக்கம் உடலில் வெள்ள ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடலானது தொற்று நோய்களை திறம்பட எதிர்த்து போராடும். அது மட்டுமில்லாமல் பசியும் கட்டுப்படுத்தப்படும். ஒருவேளை நீங்கள் சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால் பசி ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாகி இரவு சாப்பிட தூண்டும். இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் அதிகமாகி, எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.
மன ஆரோக்கியம்
சரியான நேரத்தில் தினமும் தூங்கி வந்தால் மன ஆரோக்கியம் ரொம்பவே நன்றாக இருக்கும். போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் மனம் அமைதியற்றதாக இருக்கும். இதனால் பதட்டம் மனசோர்வு போன்ற பிரச்சனைகள் எழும். எனவே தினமும் சரியான நேரத்தில் தூங்குங்கள். உங்களது மனம் அமைதியாகி மனநிலை மேம்படும்.