எடை குறைப்புக்கு டீயா? என்னனு தெரியாம மிஸ் பண்ணாதீங்க!! சூப்பர் நன்மைகள்
எடை குறைய மட்டுமின்றி இதயம், எலும்புகள், மூளை ஆரோக்கியம் என பல நன்மைகள் செய்யக் கூடிய ஜப்பான் பிரபல மாட்சா டீ குறித்த சுவாரசிய தகவல்கள்!

மாட்சா டீ நன்மைகள்
ஜப்பானில் பல விஷயங்களில் இன்றும் பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். அதில் மாட்சா டீயும் ஒன்று. இந்த டீ உடலுக்கு பல நன்மைகளை செய்யக் கூடியது. மாட்சா டீ (Matcha tea) என்பது ஜப்பானில் நிழலில் வளர்க்கக் கூடிய பச்சை தேயிலை தூளில் தயாரிக்கப்படும் டீ வகை. இதனை தண்ணீரை சூடாக்கி அதில் கலந்து குடிப்பார்கள். இது மற்ற டீயை போல் அல்லாமல் இதில் பல நன்மைகள் உள்ளன.
சரும ஆரோக்கியம்
மாட்சா டீயில் உள்ள கேட்டசின்கள், வைட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி, கே ஆகியவை சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வைட்டமின் பி-2 இளமையான சருமத்திற்கு உதவுகிறது.
இதயம், கல்லீரலுக்கு நல்லது!
மாட்சா டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரல் நொதிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. கல்லீரல் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. மாட்சா டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், இதய நோய்களை ஏற்படுத்தும் அபாயங்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
கொலஸ்ட்ரால் குறையும்
இந்த டீ குடிக்கும்போது உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவும் குறையும். காலையில் இந்த டீ குடிப்பது படிப்பில், வேலையில் கவனத்தை செலுத்த உதவும்.
எடை குறைப்பு
மாட்சா தேநீரில் குறைவான கலோரிகள் தான் உள்ளன. இதில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. வயிறு நிரம்பிய உணர்வை தரும். அதிக பசியை கட்டுப்படுத்தும். நல்ல உணவு பழக்கம், வழக்கமான உடற்பயிற்சிகள் செய்து கொண்டே பால் டீயை தவிர்த்து மாட்சா டீயை குடித்தால் கணிசமான எடை இழப்பு இருக்கும்.
சாதாரண டீ vs மாட்சா டீ;
நாம் அருந்தும் சாதாரண டீயை விட மாட்சா டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அகிகம் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகிறது. இதனுடன் பால் சேர்க்க தேவையில்லை. அதனால் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வு.