- Home
- உடல்நலம்
- உடற்பயிற்சி
- Walking for Weight Loss : எடை வேகமா குறையனுமா? வாக்கிங் கூட இதையும் பண்ணுங்க!!
Walking for Weight Loss : எடை வேகமா குறையனுமா? வாக்கிங் கூட இதையும் பண்ணுங்க!!
உடல் எடையை விரைவில் குறைக்க வாங்கிங் செல்லும்போது செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
விரைவில் எடையை குறைக்க நடைபயிற்சி
நடைபயிற்சி செல்வது உடலை பேண சிறந்த மந்திரம். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாள்தோறும் நடப்பதை பழக்கப்படுத்தலாம். இது இதயம், நுரையீரல், தசைகள், கால் என அனைத்திற்கும் நல்ல பயிற்சியாகும். எடையை குறைக்கவும் இது சிறந்த பயிற்சி. இதனுடன் எதை செய்தால் விரைவில் எடையை குறைக்கலாம் என இங்கு காணலாம்.
எடை குறைய!
எடையை குறைக்க வெறும் வாக்கிங் மட்டும் போதாது. அதனுடன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. பொரித்த உணவுகளையும், இனிப்பு உணவுகளையும் தவிர்ப்பது உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
வாக்கிங்
சாப்பிட்ட பின்னர் 10 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உங்களுடைய எடையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். செரிமானத்தை தூண்டும். காலை அல்லது மாலை வேலையில் 30 நிமிடங்கள் தினசரி வாக்கிங் செல்ல வேண்டும். இது தவிர உங்களுடைய உணவுக்கு பின் நடைபயிற்சி செய்வது எடையை கட்டுக்குள் வைக்க சிறந்த வழியாகும்.
விரதம்
நீங்கள் இண்டர்மிட்டண்ட் (Intermittent) என்ற விரத முறையை பின்பற்றலாம். 16/8 என்ற கணக்கில் 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் 8 மணி நேரம் உணவு எடுத்துக் கொள்வதே அந்த முறையாகும். இதற்கு பகலில் பட்டினி என்ற பொருள் அல்ல. உங்களுடைய உணவு நேரம் பகலில் அமையுமாறு இரவில் விரதம் இருக்கலாம். இரவ்உ உணவை மாலை 6 மணிக்குள்ளாக எடுத்துக் கொண்டால் போதும். அதன் பின்னர் அடுத்த நாள் காலை உணவை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உடலில் தேவையற்ற்ற கொழுப்பு பயன்படுத்தப்படும். எடையும் குறையும்.
தினமும் மிதமான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், நல்ல தூக்கம் கூடவே இந்த விரதமுறையும் பின்பற்றினால் உடல் எடை விரைவாக குறையும்.