இந்த பாலோட சத்துக்கள் முன் மாட்டு பால் ஒன்னுமே இல்ல.. மிஸ் பண்ணாதீங்க
எந்த விலங்கின் பாலில் மாட்டு பாலை விட சத்துக்கள் அதிகம் உள்ளன. அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Health Benefits of Goat Milk
பொதுவாக நாம் பசும்பால் மற்றும் எருமை பால் நாம் குடித்திருக்கிறோம். ஆனால் இவை இரண்டையும் தவிர ஆட்டுப்பால் அதிக நன்மை பயக்கும் தெரியுமா? தற்போது உலக அளவில் ஆட்டுப்பால் பிரபலமடைந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் உலக அளவில் பசும்பாலை விட ஆட்டுப்பால் மிகவும் விரும்பப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மைகளை வழங்குகிறது. ஆயுர்வேதத்திலும் இதன் மருத்துவ குணங்கள் பற்றி விவரித்துள்ளது. உண்மையிலேயே ஆட்டுப்பால் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? இந்த பாலை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது போன்ற பல கேள்விக்கான பதிலை இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
ஆட்டு பால்
ஆட்டு பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவற்றில் கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இந்த பாலை குடிப்பதன் மூலம் பல நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம். ஆட்டுப்பாலின் சிறப்பு என்னவென்றால் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது மற்றும் அலர்ஜி குறைவாகவே உள்ளன. சரி இப்போது ஆட்டுப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆட்டு பால் நன்மைகள்:
1. எளிதில் ஜீரணமாகும்
ஆட்டு பாலில் கொழுப்பு அமிலங்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால் இது எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால் செரிமான பிரச்சனை வராது.
2. அலர்ஜி குறைவாகவே இருக்கு
மாட்டுப் பாலை விட ஆட்டு பாலில் புரோட்டின் அமைப்பு வித்தியாசமாக இருப்பதால், சிலருக்கு மாட்டுப்பாலால் ஏற்படும் ஒவ்வாமை ஆட்டுப்பாலில் ஏற்படுவது குறைவு.
3. எலும்புகளை வலுவாக்கும்
ஆட்டு பாலில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுவாக பெரிதும் உதவுகிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் வருவதையும் தடுக்கும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஆட்டு பாலில் இருக்கும் செலினியம் மற்றும் பிற தாதுக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
5. சருமத்திற்கு நல்லது
ஆட்டு பாலில் இருக்கும் லாட்டிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. மேலும் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
குறிப்பு : ஆரோக்கியமானது என்றாலும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். எனவே ஆட்டுப்பால் குடிக்கும் முன் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.