- Home
- உடல்நலம்
- Moringa Water Benefits : முருங்கை தண்ணீருக்கு இவ்ளோ பவரா? தினமும் '1' கிளாஸ் குடிச்சா உடல்ல இந்த மாற்றங்கள் நடக்கும்
Moringa Water Benefits : முருங்கை தண்ணீருக்கு இவ்ளோ பவரா? தினமும் '1' கிளாஸ் குடிச்சா உடல்ல இந்த மாற்றங்கள் நடக்கும்
தினமும் காலையில் ஒரு கிளாஸ் முருங்கை தண்ணீர் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Moringa Water Benefits
முருங்கை இலையில் வைட்டமின்கள், பாலிபினால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சர்க்கரை உறிஞ்சுதலைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் சேர்மங்கள் இதில் உள்ளன. இது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், தினமும் காலையில் ஒரு கிளாஸ் முருங்கை பொடி கலந்து குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்
முருங்கை நீர் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இதை தினமும் குடிப்பது சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்க உதவும்.
குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது
முருங்கை இலைகளில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், ஐசோதியோசயனேட்டுகள் போன்ற சேர்மங்கள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலைக் குறைத்து, குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது.
நல்ல கொழுப்பை அதிகரிக்க முருங்கை இலை நீர் உதவும்
முருங்கை இலைகள் எல்டிஎல் ('கெட்ட') கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து, எச்டிஎல் ('நல்ல') கொழுப்பை மிதமாக அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது காலப்போக்கில் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது
ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் சேர்மங்கள் நிறைந்த முருங்கை இலைகளில், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
எடையைக் குறைக்க உதவும்
முருங்கை இலை நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ஜங்க் ஃபுட் மீதான ஆசையைக் குறைக்கும்.
குளுக்கோஸ் அளவைக் குறைக்கும்
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முருங்கை நீர் உதவும். உணவுக்குப் பிறகு முருங்கையை உட்கொள்வது குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மலச்சிக்கலைத் தடுக்கும்
இதில் உள்ள லேசான மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலைத் தடுத்து, சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும்.
முடியை பலப்படுத்துகிறது
வைட்டமின்கள், தாதுக்கள் (இரும்பு, துத்தநாகம்), ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அடர்த்தியான, நீண்ட முடியை ஊக்குவிக்கிறது.

