இந்த பதிவில் எகிறிருக்கும் உடல் எடையை ஜெட் வேகத்தில் குறைக்க முருங்கைக்காய் இலையில் ரெசிபிகள் சிலவற்றை பார்க்கலாம்.
இந்த நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் காரணமாக பலரும் பலவிதமான உடல் பிரச்சனைகளை அனுபவித்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் உடல் எடை அதிகரிப்பு. உடல் எடையை குறைக்க பலரும் பல விதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும் எடையை குறைக்க அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இதற்கு முருங்கை இலை உங்களுக்கு பெரிதும் உதவும். ஆம், முருங்கை இலையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து, பசியை தடுக்கும் . இதனால் சுலபமாக எடையை குறைத்து விடலாம். இதனுடன் முருங்கை இலையானது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வாரி வழங்குகிறது. முருங்கை இலையானது பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய உணவின் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. சரி இப்போது, எடை இழப்புக்கு முருங்கை இலையில் செய்யக்கூடிய சில ரெசிபிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
எடையை குறைக்க முருங்கை இலையில் ரெசிபிகள் :
1. முருங்கை இலைய ரொட்டி
தேவையான பொருட்கள்
முருங்கை இலை - 1/4 கப் கோதுமை மாவு - அரை கப் சீரகம் - 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, முருங்கை இலை, மஞ்சள் தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு ஈரமான துணியை கொண்டு சுமார் 10-15 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பிறகு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பிரிந்து சப்பாத்தி கட்டையில் உருட்டி தவாவில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் முருங்கை இலை ரொட்டி தயார் ல். இதனுடன் தயிர் அல்லது ஏதேனும் காய்கறி கரையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நன்மைகள்
முருங்கை இலை ரொட்டியில் இருக்கும் முருங்கை இலையானது நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளதால் இது எடை இழப்புக்கு பெரிதும் உதவும். மேலும் இதில் இருக்கும் சீரகம் செரிமானத்தை மேம்படுத்தும் மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு சக்திகள் நிறைந்துள்ளன. ஆக மொத்தம் இவை அனைத்தும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
2. முருங்கைக்கீரை சூப்
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை, சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகத்தூள், மிளகுத்தூள், தண்ணீர் மற்றும் எண்ணெய்
செய்முறை
முருங்கைக்கீரை சூப் செய்ய முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். இப்போது நறுக்கிய முருங்கைக் கீரையும், கூடவே தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை நன்றாக வெந்ததும் அதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கொள்ளுங்கள். சூப் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் முருங்கைக்கீரை சூப் தயார்.
3. முருங்கைக் கீரை பொரியல்
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை, கடுகு, உளுந்தம், பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர்
செய்முறை
முருங்கைக்கீரை பொரியல் செய்ய முதலில் முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அடுத்து பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். கூடவே, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சிறிது தண்ணீர் தெளித்து கீரை வேகும் வரை வதக்க வேண்டும். அவ்வளவுதான் இப்போது முருங்கைக் கீரை பொரியல் ரெடி.
4. முருங்கைக் கீரை கஞ்சி
முருங்கைக்கீரை கஞ்சி செய்ய முதலில் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அரிசி, தண்ணீர், முருங்கை கீரை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். கஞ்சி பதத்திற்கு வந்ததும் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்கீரை கஞ்சி தயார்.
