கிரீன் டீயில் 'இதை' கலந்து குடிங்க.. அவ்ளோஹெல்தி!! கொழுப்பு சர்னு குறையும்
கிரீன் டீயில் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் கலந்து குடித்தால் உடலில் உள்ள கொழுப்பு குறையுமாம்.

கிரீன் டீ அருந்துவதால் பல நன்மைகள் உள்ளன. சர்க்கரை கலந்த சாதாரண டீயை விட, சர்க்கரையில்லாத கிரீன் டீ பல வழிகளில் உதவுகிறது. கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறதும். கூடுதலாக இந்த டீயில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு நிறைந்த பண்புகள் உள்ளன. இதனுடன் இலவங்கப்பட்டை சேர்ப்பது அதிக நன்மைகள் தருகிறது. குறிப்பாக கிரீன் டீயில் இலவங்கப்பட்டை சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்தப் பதிவில் கிரீன் டீயில் இலவங்கப்பட்டை சேர்ப்பதன் மூலம் கொழுப்பின் அளவை எவ்வாறு குறைக்கலாம் என காணலாம்.
இலவங்கப்பட்டையில் காணப்படும் சின்னமால்டிஹைடு, பாலிபினால்கள் ஆகியவை கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இலவங்கப்பட்டை அளவாக எடுத்துக் கொண்டால் நல்ல கொழுப்பைப் பாதிக்காமல் மொத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
கிரீன் டீயும் இலவங்கப்பட்டையும்!
கிரீன் டீயில் இலவங்கப்பட்டையை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து தினமும் குடித்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். இது கெட்டக் கொழுப்பைக் குறைக்க உதவும். கிரீன் டீயில் இலவங்கப்பட்டை சேர்த்தால் கேட்டசினுடன் இணைந்து நன்கு செயல்படும். இதன் காரணமாக தமனிகள் சுத்தமாக, இரத்த சுற்றோட்டத்திற்கு ஏற்றவகையில் செயல்படும்.
இரத்த சர்க்கரை அளவு
இலவங்கப்பட்டை சேர்த்து கிரீன் டீ குடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற பலன்களை தரும். இந்தப் பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். கிரீன் டீ கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுவதால் இரண்டும் நல்ல கலவையாக இருக்கும்.
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.