- Home
- உடல்நலம்
- Green Tea vs Milk Tea:கிரீன் டீ குடிக்கலாமா? அல்லது பால் குடிக்கலாமா? இரண்டிலும் எது உடலுக்கு பெஸ்ட் தெரியுமா?
Green Tea vs Milk Tea:கிரீன் டீ குடிக்கலாமா? அல்லது பால் குடிக்கலாமா? இரண்டிலும் எது உடலுக்கு பெஸ்ட் தெரியுமா?
Green Tea vs Milk Tea: கிரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இதிலுள்ள மூல பொருட்கள் உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றது. மேலும், உடலை பாதுகாப்பாக வைக்கிறது.

green tea
பல இடங்களிலும் பலருக்கும் புத்துணர்வை ஊட்டும் பானமாக இருப்பது தேநீர் தான், ஆசியா, யுனைடெட் கிங்டம், கனடா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் என பெரும்பாலான மக்கள் தேநீருக்கு அடிமையாகி இருக்கின்றனர். பெரும்பாலான மக்களுக்கு பாலில் தயாரிக்கப்படும் தேநீர் தான் விருப்பமானதாக இருக்கிறது.
இன்றைய காலத்தில் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, நடைபயிற்சி, நடனப் பயிற்சி என எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், நாள்தோறும் கிரீன் டீ குடிங்கள் என்ற அட்வைஸ் பல திசைகளில் இருந்தும் நமது காதுகளுக்கு வந்து சேர்கிறது. இப்போது எந்த தேநீர் சிறந்தது என்பது பற்றி நாம் இங்கே பார்ப்போம்.
க்ரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது, இதிலுள்ள மூல பொருட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக இருந்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கிரீன் டீ குடிப்பதால், உடல் புத்துணர்ச்சி அடைகிறது. கிரீன் டீயில் சிறிதளவு காபின் இருப்பதால், அது நரம்புகளை புத்துணர்ச்சியாக்குகிறது. இதனால், மூளை நன்றாக இயங்கும். இதனாலேயே உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மேலும், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. கிரீன் டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை குறைகிறது.
அதேபோன்று, தேநீரில் காஃபின் உள்ளது, அதனால் நீங்கள் தேநீரை விடுத்தது காபிக்கு செல்லும் வேலையை செய்யாதீர்கள், காபியை விட தேநீர் நல்லது என்று கூறப்படுகிறது. அதிகளவு பால் கலந்த டீ குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கலாம். அதனால் ஒரு நாளைக்கு 1-2 கப் தேநீர் மட்டும் சாப்பிடுங்கள் அதற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல.
அதேசமயம் நமது உடலிலுள்ள செல்கள் ஆக்ஸிஜனேற்றத்தை உறிஞ்சுவதை பால் தடுக்கிறது, காலையில் பால் கலந்த தேநீரை குடிப்பதை விட க்ரீன் டீ குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், பால் சேர்க்காமல் பிளாக் டீயாக குடிப்பது நல்லது, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
வெறும் தண்ணீரில் தேயிலை கலந்து குடிப்பது நல்லது. அதில் கலோரி குறைவாக இருக்கும். ஆனால், அதில் பால் சேர்க்கும்போது தேநீரின் முழுமையான பலனை நம்மால் பெற முடியாமல் போய்விடுகிறது. அதனால் பால் கலந்து தயாரிக்கப்படும் தேநீரை விடவும் க்ரீன் டீ அதிக நன்மைகளை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.