Healthy food: காய்ச்சல் வந்தால், வெறும் மாத்திரை மட்டும் போதுமா..? முதலில் உணவு முறையில் மாற்றம் தேவை..!
Healthy food: காய்ச்சல் விரைவில் குணமாக, சிகிச்சை பெறுவது மட்டுமின்றி, எந்த மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் என்பது அனைவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகும். சாதாரண காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, கரோனா, மலேரியா, வைரஸ் காய்ச்சல் என்று பல விதங்களில் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சலை விரைவில் குணமாக, சிகிச்சை பெறுவது மட்டுமின்றி, எந்த மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வரும் போது, மாத்திரை எடுத்துக் கொள்வதுடன் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட்டால் காய்ச்சல் விரைவில் குறையும். சில வகையான உணவுகளை சாப்பிட்டால், காய்ச்சல் விரைவில் குறையும் என்கின்றனர் நிபுணர்கள். அது என்னவென்று பார்ப்போம்.
காய்ச்சல் வந்தால் சிக்கன் சூப்
காய்ச்சலின் போது இறைச்சி சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. இது போன்ற நேரங்களில் வறுத்த இறைச்சியை சாப்பிடக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், உண்மையில், சிக்கன் சூப் காய்ச்சலைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது.
இந்த சூப்பில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளன. இதை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்து சீராகும். இது உடல் வெப்பநிலையை குறைக்கிறது.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் தான் காய்ச்சல் வந்தால் கீரைகள், முள்ளங்கி, பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த காய்கறிகளில் இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை காய்ச்சலை விரைவில் குறைக்கும். மேலும், வைரஸ் தொற்றுகளை நீக்குகிறது.
கிச்சடி
காய்ச்சலின் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட கிச்சடி சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது ஜீரணிக்க மிகவும் எளிதானது. மேலும், இதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். இதனுடன் இட்லியும் சாப்பிடலாம். இது எளிதில் ஜீரணமாகும்.
பழங்கள்
காய்ச்சல் இருக்கும் போது பழங்கள் சாப்பிடலாம். வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும். மேலும், காய்ச்சல் இருக்கும் போது, நீர் ஆகாரமாக தேங்காய் தண்ணீர் குடிப்பது நல்லது.