Green Tea: கிரீன் டீ அதிகமாக குடிப்பவரா நீங்கள்? பக்க விளைவுகள் குறித்து உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி..
Green Tea Side Effects: கிரீன் டீ அளவை விட அதிகமாக உட்கொண்டால் பல்வேறு பக்க விளைவுகள் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
green tea
இன்று உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம் கிரீன் டீ ஆகும். இது அளவை விட அதிகமாக உட்கொண்டால் பல்வேறு பக்க விளைவுகள் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், வயிற்று எரிச்சல், பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
green-tea
கிரீன் டீயின் நன்மைகள்:
கிரின் டீ மூலம் எடை குறைப்பு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, கூந்தலின் பொலிவு கூடுதல் உள்ளிட்ட பல்வேறுஆரோக்கிய நன்மைகள் கொண்டது. ஆனால் எதையும் அதிகமாகச் செய்வது சரியல்ல என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
green-tea
கிரீன் டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலச் சுரப்பு, செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும் இது வயிற்றுப்போக்கு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்று, குடல் நோய்க்குறி உள்ளவர்கள் க்ரீன் டீயை அருந்தவே கூடாது.
green-tea
கிரீன் டீயில் தூக்கத்திற்கு எதிரான காஃபின் உள்ளது. இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். கிரீன் டீயில் உள்ள ரசாயனக் கலவைகள் தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனைச் சீர்குலைக்கத் தொடங்குகிறது. எனவே, தூங்க மின்மை பிரச்சனை உள்ளவர்கள், கிரீன் டீயைக் குடிக்கக் கூடாது.
green-tea
இதை அதிக அளவில் குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். அதாவது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை இழக்கிறது. பொதுவாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப்புக்கு மேல் க்ரீன் டீ குடித்தால் அது ஆபத்தாகலாம்.
இது தவிர,சில நேரங்களில் கிரீன் டீ ரத்தப்போக்கு ஏற்படுத்துவதைத் தூண்டலாம். எனவே, ரத்த உறைதல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கவும். மேலும், இது உங்கள் பசியும் குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும்.
green-tea
அதிகப்படியான கிரீன் டீ குடிப்பது தலைவலியை ஏற்படுத்தும் சில நேரங்களில் தலைச்சுற்றலும் ஏற்படலாம். ஏனெனில், அதில் உள்ள காஃபின் ஒற்றைத் தலைவலி நோயை ஏற்படுத்தும். உங்களுக்கு காஃபின் ஒவ்வாமை இருந்தால் இந்த பானத்தை உட்கொள்ள வேண்டாம்.
வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். கிரீன் டீயை ஏதாவது சாப்பிட்ட பின்னரே உட்கொள்ள வேண்டும் என்று நம்பப்படுகிறது.