MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வெறும் வயிற்றில் இந்த 5 பழங்களை தப்பித்தவறிக்கூட சாப்பிடாதீங்க!

வெறும் வயிற்றில் இந்த 5 பழங்களை தப்பித்தவறிக்கூட சாப்பிடாதீங்க!

பழங்கள் உடலுக்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விதியுள்ளது. சில சத்தான பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நன்மைக்கு பதிலாக அசிடிட்டி, வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.

2 Min read
Author : Priya Velan
Published : May 21 2026, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சிட்ரஸ் பழங்கள் :
Image Credit : Getty

சிட்ரஸ் பழங்கள் :

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிற்றில் ஏற்கனவே அமிலத்தன்மை (Acid) அதிகமாக இருக்கும். இதில் இந்த புளிப்பு பழங்களையும் சேர்க்கும் போது, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
பழுக்காத கொய்யாப்பழம்
Image Credit : Getty

பழுக்காத கொய்யாப்பழம்

நன்றாக பழுத்த கொய்யா ஓகே, ஆனால் லேசான காய் பதத்தில் இருக்கும் கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் கடிக்கவே கூடாது. இதில் இருக்கும் கடினமான நார்ப்பொருட்களும் (Fibers) அமிலங்களும், காலியான வயிற்றின் உள்சுவர்களை (Stomach Lining) எரிச்சலடையச் செய்யும். இது செரிமான மண்டலத்தை மந்தமாக்கி, அன்றைய நாள் முழுவதும் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

Related Articles

Related image1
அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து: சிறுநீரகத்தைப் பாதிக்கும் 6 உணவுகள்!
Related image2
பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!
36
தக்காளி... பழமா? காயா?
Image Credit : Getty

தக்காளி... பழமா? காயா?

தாவரவியல் படி தக்காளி ஒரு பழம் தான். நம்ம ஊரில் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு, அதை உடனே நிறுத்துங்கள். தக்காளியில் 'டானிக் அமிலம்' (Tannic Acid) மிக அதிகம். இது வயிற்றில் சுரக்கும் கேஸ்ட்ரிக் அமிலத்துடன் இணையும் போது, செரிக்க முடியாத கட்டிகளாக மாறி, நாளடைவில் வயிற்றில் கற்கள் (Stomach Stones) உருவாக வழிவகுக்கும்.

46
அன்னாசிப் பழம்
Image Credit : Getty

அன்னாசிப் பழம்

அன்னாசிப்பழத்தில் உடலுக்கு நன்மை தரும் என்சைம்கள் இருந்தாலும், வெறும் வயிற்றில் இது ஒரு வில்லன். அன்னாசியில் இருக்கும் 'ப்ரோமிலெய்ன்' (Bromelain) என்ற சக்திவாய்ந்த என்சைம், காலியான வயிற்றில் பட்டவுடன் குடல் சுவர்களை அரித்து, கடுமையான கேஸ்ட்ரிக் அல்சரை (Ulcer) உருவாக்கக்கூடும்.

56
மிகவும் குளிர்ந்த தர்பூசணி
Image Credit : Getty

மிகவும் குளிர்ந்த தர்பூசணி

கோடை காலத்தில் காலையில் எழுந்தவுடன் பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த தர்பூசணியை எடுத்து சாப்பிடுவது பலரது வழக்கம். தர்பூசணியில் தண்ணீர் சத்து அதிகம் தான், ஆனால் வெறும் வயிற்றில் அதிக குளுமையான பழங்களை சாப்பிடும் போது, அது வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களை சுருங்கச் செய்து, செரிமான வேகத்தை அப்படியே முடக்கிவிடும்.

66
அப்போ காலையில என்னதான் சாப்பிடலாம்?
Image Credit : Getty

அப்போ காலையில என்னதான் சாப்பிடலாம்?

காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள், பப்பாளி அல்லது கனிந்த வாழைப்பழம் போன்ற காரத்தன்மை இல்லாத (Non-citrus) பழங்களை தாராளமாகச் சாப்பிடலாம். இவை வயிற்றைப் பதமாகப் பாதுகாக்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
பழங்களின் ஆரோக்கிய நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chilled Desserts: பக்ரீத் விருந்தை ஜில்லுனு மாத்த சூப்பரான 5 டெசர்ட்ஸ்!
Recommended image2
Broiler Chicken: பிராய்லர் கோழிகள் இவ்வளவு வேகமாக வளர்வது எப்படி? ஹார்மோன் ஊசி உண்மையா?
Recommended image3
எதிலும் ஆர்வம் இல்லையா? தினமும் இந்த 6 புதுமையான விஷயங்களை செய்யுங்க!
Related Stories
Recommended image1
அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து: சிறுநீரகத்தைப் பாதிக்கும் 6 உணவுகள்!
Recommended image2
பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved