அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து: சிறுநீரகத்தைப் பாதிக்கும் 6 உணவுகள்!
health May 20 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
பேகன், சாசேஜ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உள்ள அதிக உப்பு மற்றும் ரசாயனங்கள் சிறுநீரகத்தை விரைவாகப் பாதிக்கும் எனவே இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு நல்லதல்ல
Image credits: Getty
Tamil
ஆக்சலேட் நிறைந்த உணவுகள்:
பசலைக்கீரை, பீட்ரூட், சாக்லேட் நல்லதுதான்; ஆனால், இவற்றை அளவுக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால், இதில் உள்ள ஆக்சலேட் படிகங்களால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் உண்டு.
Image credits: Getty
Tamil
அதிகப்படியான உப்பு:
சாஸ் வகைகள் மற்றும் ஊறுகாய் உப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும். உப்பை அதிகமாகச் சேர்க்கும்போது இரத்த அழுத்தம் அதிகரித்து, அது நேரடியாக சிறுநீரக வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிறது.
Image credits: Getty
Tamil
பாக்கெட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
சிப்ஸ், குக்கீஸ், பாக்கெட் உணவுகளில் சுவைக்காகவும் கெடாமல் இருக்கவும் சோடியம், பாஸ்பரஸ் சேர்க்கப்படுகின்றன. இவை சிறுநீரகத்திற்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
சோடா மற்றும் குளிர்பானங்கள்:
பாட்டில்களில் அடைக்கப்பட்ட சோடா மற்றும் செயற்கை இனிப்புப் பானங்களை அதிகமாகக் குடிப்பதால், சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் 33% வரை அதிகரிக்கிறது.
Image credits: Getty
Tamil
அளவுக்கு அதிகமான புரோட்டீன்:
புரதம் உடலுக்குத் தேவை என்றாலும், தகுந்த ஆலோசனையின்றி முட்டை, இறைச்சி அல்லது புரோட்டீன் பவுடர்களை அதிகமாக எடுக்கும்போது, சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விரைவில் பலவீனமடையும்.