Body Odor : உடல் துர்நாற்றத்தில் விடுபட உதவும் ‘நச்சு’ன்னு நாலு ஐடியா..!!
உடலில் துர்நாற்றம் ஏற்படுவதை டியோடரண்டுகள் மற்றும் பாடி ஸ்ப்ரேகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஓரளவுக்கு தடுக்கலாம். ஆனால் சில சமயங்களில் இவற்றால் கூட எரிச்சலூட்டும் வாசனையிலிருந்து விடுபட முடியாமல் போய்விடக் கூடும்.
பெரும்பாலான மக்கள் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் அதை தோற்றத்தில் மட்டும் அடைந்திட முடியாது. ஒருவர் நம்மிடம் நெருங்கும் போது, நம்மிடம் நல்ல வாசனை வீச வேண்டும். அப்போது தான் நம்மைச் சுற்றி புத்துணர்ச்சி நிலவுகிறது என்று தெரியவரும். ஏதாவது விரும்பத்தகாத வாசனை வீசினால், அதன்மூலம் எதிர்மறையான விளைவு ஏற்பட்டுவிடும். பெரும்பாலான மக்களுக்கு இது நன்றாகவே தெரியும் என்றாலும், சிலர் இதை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது. டியோடரண்டுகள் மற்றும் பாடி ஸ்ப்ரேகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவுக்குத் தீர்க்கலாம். ஆனால் சில சமயங்களில் இவற்றால் கூட எரிச்சலூட்டும் வாசனையிலிருந்து விடுபட முடியாமல் போகலாம். எனவே உடல் துர்நாற்றம் குறித்து தவறாமல் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்.
இரண்டு வேளை குளியல்
நீங்கள் இயற்கையான வழியில் உடல் துர்நாற்றப் பிரச்னையில் இருந்து விடுபட நினைத்தால், அதற்கான முதல் தீர்வு குளியல் தான். வெளியில் செல்லும் முன் குளிப்பது மிகவும் நல்லது. அதேபோன்று வேலை முடித்து திரும்பியவுடன், மீண்டும் குளிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டில் இருப்பவராக இருந்தால் காலை ஒருமுறை , தூங்குவதற்கு முன்பு ஒருமுறை என குளிப்பது நல்லது. இதன்மூலம் உடல் துர்நாற்றம் சீக்கரமே நீங்கும்.
பாக்டீரியா எதிர்நலன் சோப்பு
வாசனை வழக்கமானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் தொடர்ந்து பாக்டீரியா எதிர்ப்பு சோப்பைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். அதற்கு முன்பு நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி சரியான முறையில் ஆலோசனையை பெறுவது முக்கியம். அதை தொடர்ந்து மருத்துவர் பரிந்துரைக்கும் பாக்டீரியா எதிர்ப்புடைய சோப்பை பயன்படுத்த துவங்கலாம்.
சுத்தம் முக்கியம்
குளித்த பின் உடலை சரியாக துடைக்க வேண்டும். சுத்தமான, உலர்ந்த துண்டுடன் துடைக்கவும். இது துர்நாற்றத்தை அகற்றவும் உதவும். அதிக வியர்வை உள்ளவர்களுக்கு உடல் துர்நாற்றம் பொதுவானது. அது வேறுவிதமாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அதிகமாக வியர்க்கும் உடலை கொண்டவர்கள் எப்போதும் சுத்தமான, துவைத்த ஆடைகளை அணிய வேண்டும். வாசனை துணி கண்டிஷனர்களை ஆடைகளிலும் பயன்படுத்தலாம்.
மருந்து மாத்திரைகள்
உடல் துர்நாற்றத்தைப் போக்க ஆன்டிபெர்ஸ்பிரண்ட் மருந்துகளையும் பயன்படுத்தலாம். அனைத்து முக்கிய பிராண்டுகளிலும் இந்த தயாரிப்பு உள்ளது. இவை சந்தையிலும் கிடைக்கின்றன. மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைப் பெற்று, டாக்டர் சொல்லும் ஆன்டிபெர்ஸ்பிரண்டு மருந்துகளை வாங்கி சாப்பிடுங்கள்.