மீண்டும் சர்ரென உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா.?
தங்கத்தின் விலை சமீபத்தில் அதிரடியாகக் குறைந்து மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் கடந்த 10 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலையானது நேற்றும் இன்றும் அதிகரித்துள்ளது.
GOLD
தங்கத்தில் முதலீடு
தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அதிரடியாக குறைய தொடங்கியது. சவரனுக்கு 4200 ரூபாய் வரை குறைந்ததால் இது தான் நல்ல சான்ஸ் என மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கினர். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது எனவே மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் தங்களின் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காகவும், திருமணம் மற்றும் விஷேச நாட்களில் அணிவதற்கும் தங்கத்தை அதிகளவு வாங்குகின்றனர்.
gold
உச்சத்தை தொட்ட தங்கம்
உலகத்திலையே தங்கத்தை அதிகளவு வாங்கு குவிக்கும் நாடு இந்தியாவாகும், அந்த வகையில் நாளுக்கு நாள் டன் கணக்கில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இந்த தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் என இமாலய இலக்கை இன்னும் சில ஆண்டுகளில் தொடும் என கூறப்பட்டது.
gold chain
சரிந்த தங்கம் விலை
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலையானது சர்ரென இறங்கியது. கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு சவரன் 59ஆயிரத்து 640 ரூபாய் உச்சபட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் சரிந்தது. இரண்டு வாரத்தில் ஒரு சவரன் 4 ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது. இந்த விலை குறைவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டது.
.
gold chain
தங்கம் விலை குறைவுக்கு காரணம் என்ன.?
அந்த வகையில் அமெரிக்கா தேர்தல் முடிவின் காரணமாக விலை குறைந்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் ரூபாய் மதிப்பும் டாலருக்கு நிகராக தொடர் சரிவடைவதை அடுத்து தங்கம் விலைகள் சரிவு கண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விலை குறைவானது ஒரு சில வாரங்களுக்கு நீடிக்கும் என கூறப்பட்ட நிலையில் திடீரென நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
gold
இன்றைய விலை என்ன.?
அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 60 ரூபாயை உயர்ந்து 6,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கத்திற்கு 480 ரூபாய் உயர்ந்து 55,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது