- Home
- உடல்நலம்
- Milk and Foods : பாலுக்கும் இந்த '3' உணவுகளுக்கும் ஆகாது! இரண்டையும் ஒன்னா சாப்பிட வேண்டாம்
Milk and Foods : பாலுக்கும் இந்த '3' உணவுகளுக்கும் ஆகாது! இரண்டையும் ஒன்னா சாப்பிட வேண்டாம்
பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதை ஒருபோதும் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
பால் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். இதில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பல உடல்நல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக பால் செயல்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாலுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்படி சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அப்படி பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
மீன்
பால் குடித்த பிறகு மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் பால் குளிர்ச்சி தன்மையுடையது, மீன் வெப்பமூட்டும் விளைவை கொண்டுள்ளன. இவை இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டால் வாயு, வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால்தான் பால் குடித்த பிறகு மீன் ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பொதுவாக பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே பாலுடன் இவற்றை சாப்பிட்டால் வாயு, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வாழைப்பழம்
பலரும் இந்த தவறை செய்கிறார்கள். அதாவது பால் குடித்த பிறகு ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது தான். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இவை இரண்டும் ஒன்றாக எடுக்கும்போது ஜீரணிக்க அதிக நேரமாகும். இதனால் சோர்வு, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
உப்பு நிறைந்த உணவுகள் :
பால் குடித்த பிறகு உப்பு நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அதிகப்படியான உப்பு உட்கொள்ளலானது உயரத்தை அழுத்தம் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே பால் குடித்த பிறகு உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
. முலாம்பழம்
பால் குடித்த பிறகும் முலாம்பழம் சாப்பிட்டால் செரிமான ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இந்த இரண்டு கலவையானது செரிமான செயல்முறையை ரொம்பவே மெதுவாகும்.
பச்சை காய்கறிகள்
கீரை போன்ற பச்சை காய்கறிகளை பால் குடித்த பிறகு ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த கலவையானது ஜீரணிக்க மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஒன்றாக சாப்பிட்டால் வயிற்று வலி, அமிலத்தன்மை ஏற்படும்.
முள்ளங்கி
முள்ளங்கி இயற்கையாகவே வெப்பமானது. பால் குளிர்ச்சியானது. எனவே பால் குடித்த பிறகு முள்ளங்கி சாப்பிட்டால் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமான செயல்முறைக்கு இடையூறு ஏற்படுத்தும்.