- Home
- Lifestyle
- Reheating Milk : பாலை அடிக்கடி சூடு பண்ணுவீங்களா? இந்த விஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!
Reheating Milk : பாலை அடிக்கடி சூடு பண்ணுவீங்களா? இந்த விஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!
பாலை அடிக்கடி சூடு செய்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இங்கு காணலாம்.

அனைவர் வீட்டிலும் பால் பயன்படுத்துவார்கள். குழந்தைகள் உள்ள வீட்டில் பால் கட்டாயம் 24 மணி நேரமும் இருக்கும். பசும்பால், பாக்கெட் பால் என வசதிக்கேற்றபடி மக்கள் பால் வாங்குகிறார்கள். சில காய்ச்சி வைத்து தேவைக்கேற்ப பயன்படுத்துவார்கள். சிலர் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். சிலர் பிரிட்ஜில் வைப்பதே காய்ச்சிய பாலைதான். அதை மீண்டும் வெளியே எடுத்து சூடு செய்து பயன்படுத்துவார்கள்.
ஒவ்வொரு முறை பாலை பயன்படுத்தும் போதும் அதை சூடாக்குவதால் பக்க விளைவுகள் வரும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. சூடு செய்வதால் பால் கெட்டுப்போகாமல் இருக்கும். அதனால் பாலை திரும்பத் திரும்ப சூடு செய்வது நல்லது என நினைக்கிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் பாலை கொதிக்க விடுவது நல்லதல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாலில் கிளைசேஷனை அதிகரிக்கிறது.
பாலை மீண்டும் மீண்டும் சூடு செய்தால் அதில் சில இரசாயனங்கள் உற்பத்தியாகின்றன. அவை மென்மையான இரத்த நாளங்களை கடினப்படுத்தக் கூடவை. மீண்டும் மீண்டும் காய்ச்சிய பாலை அடிக்கடி குடித்தால் இரத்த சிவப்பணுக்களைக் கூட கடினமடைய செய்கின்றன. இதனால் இரத்த சிவப்பணுக்களின் அதன் நெகிழ்வுத்தன்மை அல்லது திரவத்தன்மை சீர்குலைகின்றது. இவை நாளடைவில் இரத்தக்குழாயில் கட்டிகளாக தேங்கிவிடும் அபாயம் உள்ளது. இப்படி தேங்குவதால் இரத்த ஓட்டமும் இயல்பாக இருக்காது. சிலருக்கு இதனால் மாரடைப்பும் வரக்கூடும். கல்லீரல் வீக்கத்திற்கும் காரணமாகிறது.
மீண்டும் மீண்டும் பாலை சூடுபடுத்துதல், பின் ஆறவைத்து பயன்படுத்துதல் பாலில் உள்ள சில ஊட்டச்சத்துக்களை குறைக்கும். வைட்டமின் D, வைட்டமின் B, புரதங்களை உடைக்கும். அளவாக பாலை வாங்கி பயன்படுத்துவதே சாலச் சிறந்த நடவடிக்கையாகும். மீண்டும் மீண்டும் காய்ச்சிக் கொண்டே இருப்பது பால் குடிப்பதற்கான நன்மைகளையே நீக்கிவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.