மஞ்சள் பால் அல்லது மஞ்சள் தண்ணீர் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் சமையறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், ஆயுர்வேதத்திலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று நோயை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
அதனால்தான் நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் இருந்தே பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நடைமுறைக்கு வந்தது. ஆனால், தற்போது தண்ணீரிலும் மஞ்சள் கலந்து கலந்து குடிக்கிறார்கள். சமீபத்தில் இது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது. சமூக ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் இதை பற்றி தான் பேச்சு. அந்த வகையில் மஞ்சள் பால் அல்லது மஞ்சள் தண்ணீர் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
- மஞ்சள் பால் ஆரோக்கிய நன்மைகள் :
அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் - மஞ்சளில் குர்குமின் என்ற அலர்ஜி எதிர்ப்பு பண்பு உள்ளது. இது கீழ்வாதம் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் - மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் - தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பால் குடித்து வந்தால் இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.
சிறந்த செரிமானம் - தினமும் மஞ்சள் பால் குடித்து வந்தால் வாயு, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
தயாரிக்கும் முறை :
ஒரு கிளாஸ் சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்தால் போதும். மஞ்சள் பால் தயார். விரும்பினால் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எப்போது குடிக்க வேண்டும்?
தினமும் இரவு தூங்கும் முன் குடிப்பது தான் சிறந்தது.
2. மஞ்சள் தண்ணீர் ஆரோக்கிய நன்மைகள்:
நச்சுநீக்கம் - மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பண்புகளை கொண்டுள்ளன.
செரிமானம் மேம்படும் - மஞ்சள் பாலை போலவே மஞ்சள் தண்ணீரும் செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
எடை இழப்பு - மஞ்சளில் இருக்கும் குர்குமின் வளர்ச்சியை மாற்றத்தை கட்டுப்படுத்தி, வீக்கத்தை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது.
சரும ஆரோக்கியம் - மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான அறிகுறிகள் குறைத்து, சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.
தயாரிப்பு முறை : ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து தயாரிக்கப்படுவது ஆகும்.
எப்போது குடிக்க வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
எது சிறந்தது?
மஞ்சள் பால் மற்றும் மஞ்சள் நீர் இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது தான். எனவே உங்களது ஆரோக்கிய தேவைகளுக்கு ஏற்ப இவை இரண்டில் இது வேண்டுமானாலும் குடியுங்கள்.
