- Home
- உடல்நலம்
- Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
உங்கள் இதயம் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Heart Healthy Exercises
அதிகரித்து வரும் மன அழுத்தம், பரபரப்பான வேலைகள் மற்றும் அதிகரித்து வரும் உட்கார்ந்த வாழ்க்கை முறை மத்தியில் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது சவாலான விஷயமாகும். இதயம் தொடர்பான பிரச்சனைகள் வயதானவர்கள் மட்டுமல்ல தற்போது இளைஞர்கள் மத்தியிலும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இதயத்தை வலுவாக வைக்க உங்களது அன்றாட வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் உடற்பயிற்சியை செய்து கொள்ளுங்கள். அது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். சரி இப்போது உங்களது இதயத்தை வலுப்படுத்த உதவும் 5 உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
விறுவிறுப்பான நடைபயிற்சி (Brisk Walking) :
ஹார்ட்வேர் ஆய்வின் படி, மெதுவாக நடப்பவர்களை விட வேகமாக நடப்பவர்களுக்கு தான் அசாதாரண இதய துடிப்பு ஏற்படும் அபாயம் கணிசமாக குறைவதாக கண்டறிந்துள்ளன. அதுபோல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வின் படி, ஒரு நாளைக்கு 11 நிமிடங்கள் வேகமாக நடப்பதன் மூலம் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் கணிச்சமாக குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நீச்சல் (Swimming) :
எல்லாவிதமான கார்டியோ பயிற்சிகளிலும் நீச்சல் பயிற்சி ஒரு சிறப்பு இடத்தை பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் இது மூட்டுகளில் கிட்டத்தட்ட பூஜ்ஜிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில், நீச்சல் வீரர்களுக்கு பிறரை விட 50 சதவீதம் குறைவான அனைத்து காரண இறப்பு விகிதம் கொண்டிருப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது 20-40 நிமிடங்கள் நீச்சலடிக்கவும்.
சைக்கிள் ஓட்டுதல் (Cycling) :
நீங்கள் வெளியில் சென்று சைக்கிள் ஓட்டினாலும் சரி அல்லது வீட்டில் உடற்பயிற்சி மிதிவண்டி (exercise cycle) ஓட்டினாலும் சரி, தினமும் சைக்கிள் ஓட்டுதல் இதயத் துடிப்பை அதிகரிக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், இதய தசையை வலுப்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வலிமை பயிற்சி (Strength Training) :
இந்த பயிற்சி பெரும்பாலும் தசை வளர்ச்சி அல்லது உடல் மேம்படுத்துவதுடன் தொடர்புடையது என்றாலும், இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. 13,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான எதிர்ப்பு பயிற்சி கூட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை 40 முதல் 70% குறைப்பதாக கண்டறிந்துள்ளன.
நடன பயிற்சி (Dancing) :
வாக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே நடன பயிற்சி செய்யலாம். நாம் ஆடும்போது நமது உடலானது அதிக இயக்கங்களுக்கு உட்படுத்தப்படும். எனவே உங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு வீட்டிலேயே நடன ஆடுங்கள். தற்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நடன பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பயிற்சியாகும். மேலும் இது மகிழ்ச்சியான மனநிலையை மேம்படுத்தும்.

