புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட உடற்பயிற்சிகளைக் குறித்து இங்கு காணலாம்.

புற்றுநோய் போன்ற மோசமான நோயிலிருந்து நம்மை காக்க உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது என தெரிந்து கொள்ள ஒரு புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக முன்னரே பல ஆய்வுகள் செய்யப்பட்டன. உடற்பயிற்சியால் புற்றுநோயால் இறக்கும் அபாயம் குறையும் என்பதது அதில் தெரிய வந்தது. ஆனாலும் இந்தப் புதிய ஆய்வில் மற்றொரு உண்மை தெரிய வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்யும்போது புற்றுநோய் செல்களுடைய வளர்ச்சி குறைவதாக நிரூபணம் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்ட பெண்களை வேலைக்கு அமர்த்தினர். அவர்களுக்கு பளு தூக்குதல் அல்லது உயர்-தீவிர இடைவெளி பயிற்சி (HIIT) இவற்றில் ஒன்றை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்த பயிற்சிகளை முடித்த பின் ஆச்சரியமூட்டும் மாற்றம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் எதிர்ப்பு பயிற்சி அல்லது ஹிட் பயிற்சிகள் செய்த பின், அவர்களுடைய இரத்தத்தில் 47% வரை அதிக மயோக்கின்கள் இருந்ததாக முடிவுகளில் தெரிய வந்தது.

மயோக்கின்கள் என்றால் என்ன?

உடற்பயிற்சி செய்யும்போது எலும்பு தசைகள் வெளியிடும் புரதங்கள் தான் மயோக்கின்கள். இவை தசைகளை உடலின் மற்ற பகுதிகளுடன் தொடர்பு வைத்து கொள்ள உதவும். இந்த மயோக்கின்கள்தான் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. புற்றுநோய் செல்கள் உருவாவக முக்கிய காரணியான வீக்கத்தை உண்டாக்கும் மூலக்கூறுகளை தடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்தது. மயோகைன்கள் அதிகரிப்பது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 20-30% குறைக்க உதவும்.

இந்த ஆய்வில் ஒரே ஒரு உடற்பயிற்சி அமர்வுக்கு பின் எதிர்ப்புப் பயிற்சி மற்றும் ஹிட் (HIIT) ஆகிய இரண்டும் புற்றுநோய் எதிர்ப்பு திறனை கொண்டதாக தெரியவந்தது. அவை மயோகைன்களின் வெளியீட்டை துரிதப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரிய வந்தது. மேலும் ஆய்வக சோதனையில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியில் 30 சதவீதம் வரை குறைந்தது.

மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை இதழில் வெளியான இந்த ஆய்வில், குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு முன்பே, முதல் நிலை முதல் 3ஆம் நிலை வரை மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்ட 32 நோயாளிகள் பங்கேற்றனர். எதிர்ப்பு பயிற்சிகள் செய்யப்பட்ட குழுவில் இருந்தவர்கள் முக்கிய தசைகளை ஈடுபடுத்தும் ஐந்து செட் பயிற்சிகளை 8 தடவை செய்தனர். ஒவ்வொரு செட் முடியும்போதும் 1 முதல் 2 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார்கள்.

இன்னொரு குழுவில் ஹிட் (HIIT) பயிற்சிகளை செய்தார்கள். நிலையான பைக், டிரெட்மில், ரோவர் மற்றும் கிராஸ்-ட்ரெய்னர் ஆகிய உடற்பயிற்சி இயந்திரங்களில் ஏழு முதல் 30 வினாடிகள் உயர்-தீவிர உடற்பயிற்சியை செய்தனர். இவர்களுக்கு ஒவ்வொரு செட்டுகளுக்கு இடையில் 3 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.

உடற்பயிற்சி முடிந்ததும் ஹிட் குழுவில் (HIIT) உடனடியாக இரத்தத்தில் மயோகின் IL-6 47% அதிகரித்தது கண்டறியப்பட்டது. இதற்கு எதிர்ப்பு பயிற்சி, ஏரொபிக் பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. எதிர்ப்பு பயிற்சி தசை வலிமையும், ஏரோபிக் பயிற்சி இதய சுவாச மேம்பாட்டையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் வாரத்தில் 3 நாட்கள் ஹிட் பயிற்சிகளையும் 4 நாட்கள் எதிர்ப்பு வலிமை பயிற்சிகளையும் செய்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.