Exercise செய்த பிறகு தலைவலி வருதா..? காரணம் இதுதாங்க..!
உடற்பயிற்சி செய்த பிறகு உங்களுக்கும் தலைவலி வருகிறதா..? அதற்கான காரணம் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தற்போது, உடற்பயிற்சி நம்முடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
உடல் பருமனைக் குறைக்க, மன அழுத்தத்திலிருந்து விடுபட, மற்றும் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க போன்ற பல நன்மைகள் இதில் உள்ளன. இருப்பினும், உடற்பயிற்சி செய்த பிறகு சிலருக்கு தலைவலி வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்பதை குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, நம் உடலானது உடற்பயிற்சியை நேர்மறையான முறையில் ஏற்றுக்கொண்டால், எந்த விதமான பிரச்சனையுமில்லை, ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்றால் தலைவலி ஏற்படும்.
உங்களுக்கு தெரியுமா..நாம் உடற்பயிற்சி செய்யும் போது, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், இரத்த நாளங்கள் பெரிதாவதால், இது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இது தலைவலியை உண்டாகும்.
அதிக உடற்பயிற்சி செய்யும் போது அல்லது வேலை செய்யும் போது, உடலில் இருந்து நீர் வியர்வையாக வெளியேறுகிறது. உடலில் நீர் இல்லை என்றால் மூளைக்கு ஆக்ஸிஜன் சரியாக கிடைப்பதில்லை. இதனால் தலைவலி ஏற்படும்.
இதையும் படிங்க: காலையில் தலைவலியுடன் எழுந்திருக்கிறீர்களா? அதற்கு என்ன காரணம்? எப்படி சரிசெய்வது?
இரவில் சரியாகத் தூங்கவில்லை முடியாமல் இருப்பவர்கள், உடற்பயிற்சி செய்த பிறகு தலைவலி வரும் மற்றும் விரைவில் சோர்வடைய வாய்ப்பு அதிகம்.
இதையும் படிங்க: Summer Migraine: கோடையில் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா...? மறந்துகூட இவற்றை சாப்பிடாதீர்கள்..!!
தடுக்க வழி:
உடற்பயிற்சியின் போது நீரேற்றமாக இருங்கள்.
அதிக உடற்பயிற்சிகளை தவிர்க்கவும்.
முழுமையான தூக்கத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்யுங்கள்.
வெயிலில் ஒருபோதும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D