- Home
- உடல்நலம்
- Fatigue Causes : எப்போதுமே சோர்வாக உணர்கிறீர்களா? அப்ப இத கவனிங்க.. இல்லனா பிரச்சினையாகிடும்!
Fatigue Causes : எப்போதுமே சோர்வாக உணர்கிறீர்களா? அப்ப இத கவனிங்க.. இல்லனா பிரச்சினையாகிடும்!
நீங்கள் அடிக்கடி சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் உங்களது உடலில் ஏதேனும் அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்று அர்த்தம். அவை என்ன என்பது பற்றி இங்கு காணலாம்.

Fatigue Causes
இரவு நன்றாக தூங்கிய பிறகும் நீங்கள் அடிக்கடி சோர்வாக உணருகிறீர்களா? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் மிகவும் கவனிக்கப்படாத காரணங்களின் ஒன்றுதான் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். ஆம், உடலானது சிறப்பாக செயல்பட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியம். ஆனால் உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லையெனில், நீங்கள் நாள் முழுவதும் சோர்வாகவும், சோம்பலாகவும் உணருவீர்கள். இதனால் எதிலும் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். இந்த பதிவில் நீங்கள் எப்போதுமே சோர்வாக இருப்பதற்கு காரணமான 5 பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. இரும்புச்சத்து :
உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சிவப்பணுக்கள் தசைகள் மற்றும் திசுக்களுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்க முடியாமல் போகும். இதனால் நீங்கள் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வீர்கள். இரும்புச்சத்து குறைபாட்டால் பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். மேலும் இரத்த சோகையை ஏற்படுவதற்கு இரும்புச்சத்து குறைபாடு தான் காரணம். அடிக்கடி தலைச்சுற்றல், சோர்வு, மூச்சு திணறல் ஆகியவை இவற்றின் அறிகுறிகள் ஆகும்.
2. வைட்டமின் டி :
எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் சில உடலின் செயல்பாடுகளுக்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால், நீங்கள் எப்போதுமே சோர்வாக உணர்வீர்கள். தசையும் பலவீனமாகும். சூரிய ஒளி வைட்டமின் டி இன் முக்கிய ஆதாரமாக இருப்பதால், இவற்றின் மூலம் வைட்டமின் டி பெறலாம். இது தவிர கொழுப்பு நிறைந்த மீன், முட்டை, செறிவூட்டப்பட்ட பால் மற்றும் சப்ளிமெண்ட் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
3. வைட்டமின் பி12 :
இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் பி12 முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டால் நினைவாற்றல் பிரச்சனை, மனநிலை மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான சோர்வுக்கு வழிவகுக்கும். கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு ஆகியவையும் வைட்டமின் பி 12 அறிகுறி ஆகும். தானியங்கள், பால் பொருட்கள், முட்டை அல்லது சப்ளிமென்ட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த வைட்டமின் குறைபாட்டை தடுக்கலாம்.
4. மெக்னீசியம் :
ஆற்றல் உற்பத்தி, தசை செயல்பாடு என ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டுக்கும் மெக்னீசியம் உதவுகிறது. இது குறைந்தால் அதிகப்படியான சோர்வு, எரிச்சல், தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும். மேலும் தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்படும். பாதாம், வெண்ணெய், இலை கீரைகள் போன்ற உணவுகள் சாப்பிடுவதன் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை சரி செய்யலாம். இது தவிர சப்ளிமெண்ட்களும் எடுத்துக் கொள்ளலாம்.
5. ஃபோலேட் :
வைட்டமின் பி 9 என்று அழைக்கப்படும் இது டிஎன்ஏ உற்பத்தி மற்றும் செல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் அவசியம். உடலில் இதன் குறைபாடு ஏற்பட்டால் அதிக சோர்வு,, மோசமான செறிவு மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். இலை கீரைகள், பீன்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஃபோலேட் அளவை அதிகரிக்கலாம். தேவைப்பட்டால் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம்.